பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெ. தூரன் 31 9 தோன்றிய பகலவனும் சிரித்தான். மறு கணம் கந்தப்பனுக்குத் தன் மேலேயே வெறுப்புண்டாயிற்று. குடி பெருந்தீங்கு என்ற எண்ணம் திடீரென்று அந்தப் பறவைகளைப் பார்த்ததாலோ வைகறையின் வசீகரத்தாலோ அவனுக்கு ஏற்பட்டது. இந்த எண்ணத்துடன் அவன் தன் வீட்டுக்குள் நுழைந் தான். இரவு பட்டினியாகையால் குழந்தைகள் இரண்டும் வயிறு ஒட்டிப் பிய்ந்த பாயில் படுத்துக் கொண்டிருந்தன. தூக்கமோ, பசிமயக்கமோ-குழந்தைகள் அவனைக் கண்டு ஒன்றும் பேச வில்லை. வேலாயி, இரவில் வெகு நேரம் தூங்காமல் அழுது கொண்டிருந்தபடியால் தலை நோவுண்டாக, பக்கத்து வீட்டுக் காரி கொடுத்த நாலு மிளகை அரைத்து நெற்றியில் தடவிக் கொண்டிருந்தாள். இக்காட்சியால் கந்தப்பனுக்கு அடக்க முடியாத துக்கம் வந்துவிட்டது. பழைய அன்பு, குடியில் வெறுப்பேற்பட்டவுடன் திரும்பிவர, அவன் வாய்விட்டுக் கதறினன் ! இனிமேல் நான் இந்தப் பாழும் கள்ளைக் கையில்கூடத் தொடுவதில்லை' என்று தன் மனைவியின் முன் சத்தியம் செய்தான். அப்பொழுது தான் அவனுக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. வேலாயி மறுபடியும் நல்ல நாட்களைக் காண ஆரம்பித் தாள். கந்தப்பன் தனது சத்தியத்தைக் கைவிடவில்லை. கூலிப் பணம் பழையபடி வேலாயி கையில் விழுந்தது. ஆனல் தொலைத்து விட்ட நூறு ரூபாயைக் கொடுக்க அடகு வைத்த தாலியை இன்னும் திருப்பவில்லை. வேலாயி கழுத்தில் தாலிக்குப் பதிலாக ஒரு சிறு நூல் சரடுதான் இருக்கிறது. கந்தப்பன், தன்னை அவமானத்திலிருந்து காக்கத் தன் மனைவி தாலியை அடகு வைக்கத் துணிந்ததைக் கண்டு அவள்மேல் முன்னிலும் அதிக அன்பு கொண்டான். ' குடிப்பதில்லை, இது உறுதி” என்று பலமுறை சொல்லிக் கொள்ளுவான். அதோடு கிராமசேவையில் ஈடுபட்ட பல தொண்டர்கள் அக்கிராமத்தில் வந்து செய்யும் மதுவிலக்குப் பிரசாரத்தை அவன் தப்பாமல் கேட்பான். படிக்கத் தெரியாவிட்டாலும் பல சொற்பொழிவு களைக் கேட்டு அவன் மதுபானத்தின் தீங்கைப் பற்றி நன்ருகத் தெரிந்து கொண்டான். ஆனல் மதுபானம் தீங்கு என்ற உண்மையை உணர்ந்து அவன் அதைத் தொடாமல் இருக்கவில்லை; சத்தியத்தைக் காப்பாற்றவேண்டும், குடிப்பதால் மனைவி மக்கள் துன்புற வேண்டியிருக்கிறது என்ற எண்ணங்களே அவனைக் குடிக்காம லிருக்கச் செய்தன. - o