பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 புதுக் கடை கந்தப்பன் தனது உறுதியில் வெற்றிப் பெறுவதற்கு அரசாங் கத்தில் உண்டான ஒரு முக்கிய மாறுதலும் உதவி புரிந்தது. முதன் முதலில் காங்கிரஸ் ஆட்சி சென்னை மாகாணத்தில் ஏற்பட் டதும் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு அமுலுக்கு வந்தது. செங்காளிபாளையம் அந்த மாவட்டத்தில் இருந்ததால் அங்கு மதுக் கடைகள் மூடப்பட்டன. கந்தப்பன் குடியை அறவே மறந்துவிட்டான். 并 米 挑 கிலம் மெதுவாக நழுவிக் கொண்டிருந்தது. அப்படி நழுவிய ஐந்தாறு ஆண்டுகளில் எத்தனையோ மாறுதல்கள் உண்டாயின. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இந்தியாவுக்கு சுதந்திரம் தருவதாகத் தெளிவான வாக்குறுதி கிடைக்காததால் காங்கிரஸ் ஆட்சியை விட்டு விலகிக்கொண்டது. பயங்கர யுத்தம் உலகத் தையே வளைத்துக் கொண்டது. சேலத்தில் மது அரக்கன் மறு படியும் தாண்டவமாடலானன். மறுபடியும் ஒரு புதன்கிழமை. கந்தப்பனுக்கு இப்பொழுது சம்பளம் சிறிது அதிகம். மத்தியானம் சுமார் இரண்டு மணிக்குக் கந்தப்பன் கூலிப்பணத்தை வாங்கிக்கொண்டு வந்தான். இத்தனை ஆண்டுகளாக மிச்சம் பிடித்த பணத்துடன் இதையும் சேர்க்கவே மொத்தம் 103 ரூபாய் இருந்தது. அதைக் கண்டு அவன் உள்ளம் பூரித்தது. இனி அடகு வைத்த தாலியைத் திருப்பி விடலாம்' என்று அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு சந்தைக் குப் புறப்பட்டான். சந்தைக்குள் நுழைவதென்ருல் கள்ளுக்கடையைத் தாண்டி வந்தாகவேண்டும். சந்தையன்று மக்கள் அதைப் பார்க்காது சென்ருலும் ஏழு நாளைய புளித்த கள் நாற்றத்தையாவது மூக்கில் ஏற்றிக் கொண்டு போய்த்தானக வேண்டும். அதோடு வழக்கமாக அன்று கள் விலை சொப்பு ஒர் அணு ஆகிவிடும். ' விலை சொப்பு ஒரு அணு ' என்று ஒருவன் திடுமம் அடித்துக் கொண் டிருப்பான். கந்தப்பன் கடையை அணுகியதும் பழைய நினைவு எப்ப டியோ உதயமாகிவிட்டது. நல்ல வெயிலில் இரண்டு மைல் களுக்கு மேல் நடந்ததால் அவனுக்கு மிகுந்த தாகம் உண்டா யிற்று. தாலியைத் திருப்ப 100 ரூபாய் போதும் ; சந்தைச் செலவுக்கு இரண்டு ரூபாய் வேண்டுமென்று வேலாயி சொல்வி யிருக்கிருள். ஒரு ரூபாய் மீதி இருக்கிறதே, அதைச் சொந்தச் செலவிற்கு வைத்துக் கொண்டால் என்ன? இன்றைக்கு ஒரு நாள் மட்டும் மனமாரக் குடித்துவிட்டுப் பிறகு அதை நினைக் கிறதே இல்லை என்று இம்மாதிரி அவன் மனத்தில் நினைப்