பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெ. தூரன் 3.21 போடியது: களேப்பாறவோ என்னவோ அவன் சந்தைக்குள் நுழையாமல் கள்ளுக்கடைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு வேப்ப மரத்து நிழலில் உட்கார்ந்தான். கந்தப்பன் மறுபடியும் கள்ளைப் பற்றி நினைத்தான் : விட் டது முதல் அதன் மேலேயே ஒரே பைத்தியமாக இருக்கிறது. இன்றைக்கு ஒரு நாள் குடிப்பதால் என்ன முழுகிவிடும்? நான் முன்னைப் போல் தினமுமா குடிக்கப் போகிறேன் ? இந்த ஆசை யைத் தீர்த்துக் கொள்ள இன்றைக்கு மாத்திரம். மறுபடியும் இதைத் தொடுவதே இல்லை. மறுபடியும் கடையைத் திறந் திருக்கிருர்களே. ஒரு தடவை குடித்தால் என்ன கெட்டுப் போகும் ? புதுக் கடையைக் கண்டது முதல் அதே நினைவாக இருக்கிறது. இன்றைக்கு மாத்திரம் குடித்துப் பார்த்துவிட்டு மறுபடியும் அதைத் தொடுவதே இல்லை. இன்றைக்கு மாத்திரம்: மறுபடியும் கிட்டக் கூட போவதில்லே ' என்று அவன் மறுபடி யும் உறுதியாகத் தீர்மானிக்கத் தொடங்கினன். ஆகக் கூடி ஒரு நாலணுக் காசு- இந்த ஆசை தொலையட்டும் ' என்று முனகிக் கொண்டே கந்தப்பன் கடைசியாகக் கடைக்குள் நுழைந்து விட்டான். அன்று அவன் வேலாயியைப் பார்க்கவில்லை. புளித்த கள்ளை வெயில் நேரத்தில் இன்றைக்கு மாத்திரந்தான்ே என்று நிறையக் குடித்த தலுைம், நெடுநாளாகக் குடிப்பழக்கம் விட்டுப் போனதாலும் அவனுக்குப் போதை மீறிவிட்டது. சந்தை சென்று திரும்பிய வண்டிக்காரன் ஒருவன் அவன் வழியில் தடு மாறுவதைக்கண்டு வண்டியில் தூக்கிப்போட்டுக் கொண்டு போய் அவன் வீட்டில் விட்டான். கந்தப்பனுக்குப் போதை தெளிவதற்குள் இருட்டிவிட்டது. முதலில் எங்கிருக்கிருேமென்றே அவனுக்குத் தெரியவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நடந்தவையெல்லாம் நினைவிற்கு வந்தன. வாக்குத் தவறினதுமல்லாமல், வேலாயிக்குத் தெரி யும்படி நடந்துகொண்டேனே யாரிடத்திலாவது அவளிடம் கொடுக்கும்படி இரண்டு ரூபாயை முதலிலேய்ே கொடுத்திருக்க வேண்டும் ' என்று பலவாறு நினைத்துக் கலங்கினன். அப் பொழுதுதான் அவனுக்குந் தான் கொண்டுபோன ரூபாயைப் பற்றிய எண்ணம் வந்தது. மடியைத் தொட்டுப் பார்த்தான். பையைக் காணவில்லை. - சந்தையில் ஒரு செலவும் வாங்காமல் வேலாயி வெறுங் கூடையுடன் வீட்டுக்கு வந்தாள். அடே அம்மா வந்துட்டாக அம்மா மிட்டாயி' என்று சத்தம் போட்டுக்கொண்டு சிறு வர்கள் ஓடிவந்தார்கள். - . . . . . . еп-21