பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323 புதுக் கடை கந்தப்பனுக்கு இதைக்கேட்கப் பொறுக்க முடியவில்லை. வேலாயியிடம் நடந்ததை ஒளிக்க அவன் இப்பொழுது கருதா மல் தனது மனதைக் கலைத்த கள்ளுக்கடையை ஒரு சிலந்திக் கூடு என மனதிற்குள்ளேயே சபிக்கலானன். அதே சமயத்தில் வேலாயியின் வாடிய கண்கள் அவன் கண்களைச் சந்தித்தன. ஐயோ! கடையை மறுபடியும் திறந்துவிட்டு என் புத்தியைக் கெடுத்து விட்டார்களே ! கடையில்லாவிட்டால் நான் புத்தி கெட்டு போயிருக்க மாட்டேனே ' என்று அவன் கதறினன்,