பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. சா. ராஜக 3| மேஜர் ரஹ்மான் பேசுகிறேன் நான்தான் மேஜர் ரஹ்மான். 67ರ್ಪಸಿ உங்களுக்குத் தெரி யாது; ஆல்ை உங்கள் அனைவரையும் எனக்குத் தெரியும். தமிழ் மொழி எட்டாத இந்தத் தொலை தூரத்தில், மலைச் சாரலில், ஒரு கூடாரத்தினுள் உட்கார்ந்து சிந்தனை செய்யும் போது, நீங்களே தான் நான் என்ற உணர்வு எனக்குத் தோன்றுகிறது. அன்னை காவிரி, கடலுக்குள் கலப்பதற்கு முன்னல் ஐந்து கிளைகளாகப் பிரிந்து பூம்பொழில் விளையாட்டு ஆடுகிருளே, அந்த மாவட்டத்தில் பிறந்தவன் நான். என்னுடைய ஊர் பாபநாசத்திற்கும் ஐயன்பேட்டைக்கும் இடையே உள்ளது: அங்கேயுள்ள பூவரசு மரங்கள், தாமரைக் குளம், வாழைக் கனி, வெற்றிலைக் கொடிக்கால், ராஜன் வாய்க்கால், பிள்ளையார் கோயில், வெண்ணிற மசூதி எல்லாம் எனக்குச் சொந்தம்: அவை என்னுடைய உதிரத்துடன் தொடர்பு கொண்டவை. அவைகளிலிருந்து என்னைத் தனியே பிரித்துவிட்டால் நான் வெறும் கட்டை, உயிரற்ற சவம் ! . அரபு, தமிழ், ஸ்ம்ஸ்கிருதம் ஆகியவற்றின் கலப்பான கொச்சை மொழி ஒன்றை வீட்டில் நாங்கள் பேசுவோம். சோழ மன்னர்கள் காலத்தில், நாகப்பட்டினத்திற்கு அருகில் கரை தட்டிய மரக்கலம் ஒன்றில் வந்த அரபுப் பெண் ஒருத்தியை என் மூதாதையர் மணந்ததாக என் நானி-அதுதான் பாட்டிகூறுவது வழக்கம், என் நானிக்கு மதம் என்று ஒன்றும் கிடை யாது. அவளுக்குக் குமரன் ஆவேசம் வரும் : மாரியம்மன் கோயிலுக்குப் போய் வருவதும் உண்டு, ரம்ஜான் மாதங்களில்