பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 மேஜர்ரஹ்மான் பேசுகிறேன் நோன்பும் இருப்பாள். பல ஏழைகளுக்கு தக்காத் கொடுப் பாள். அவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களும் உண்டு. ஆளுல் என் தாத்தா அப்படி இல்லை. பஞ்ச் நமாஜி' - அதாவது, திருக்குர்ரான் ஷெரீஃபில் கூறியுள்ள வகைப்படி ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை புரிபவர். எந்த வேலை செய்துகொண் டிருந்தாலும் தொழுகை நேரத்தில் அவருடைய மனம் ஒருமுகப் பட்டுவிடும். அந்த வேளையில் அவரை யாராவது காயப்படுத்தி ல்ை கூடத் தெரியாது, மெய்ப்பொருள் நாயஞரைப் போல. நான் ஒரு மெளல்வியாக வேண்டும் என்று என் பாட்ட ருைக்கு ரொம்ப ஆசை. அதற்காகவே அவர் என்னைச் சிறு வயதில் ஜப்பார் தாத்தாவிடம் அனுப்பினர். ஜப்பார் தாத்தா பெரிய கல்விமான். பேசும்போதெல்லாம் அவருடைய நீண்ட வெண் தாடி அசைவது வேடிக்கையாக இருக்கும் என்ருலும் நான் கற்றுக்கொண்ட ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வாதுமை அல்லது ஒரு கல்கண்டு கொடுப்பார். அவற்றை எல்லாம் வாங்கி நான் கைலியில் கட்டிக்கொள்ளுவேன். எங்கள் சந்தில் வசித்த மீளுவுக்கும் அதில் பங்கு உண்டு. மீன யார் என்றும் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். அவள் என் இளமைத் தோழி, ஆப்பம் சுட்டு விற்கும் பட்டாச்சியின் ஒரே மகள்: வாளை மீனைப்போன்ற அவளுடைய சலிக்கும் கண்கள் மிகுந்த அழகாக இருக்கும்: - ஜப்பார் தாத்தா உருது பாஷையைப் பற்றிச் சொன்னது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அஜீஸ் பாயி -அவர் என்னை அப்படித்தான் அழைப்பார். இந்த மொழி செளர்சேனி பிராகிருதத்திலிருந்து கிளேத்தது. டெல்லியின் க்ற்றுப்புறத்தில் மொகலாய ஆரண்மனையை ஒட்டிப் பிறந்ததால் இதற்கு இ லாவிஎன்று பெயர். பிறகு அவர்கள் ஆட்சியில் இது தழைத்து வளர்ந்தது ; கடிபோலி என்று பெயர் பெற்றது. பின்னல் உருது ஆயிற்று...' ... உலகத்திலுள்ள மொழிகள் பெரும்பாலும் 'அ' வைத் தொடக்கமாகவும் 'ல வை இறுதியாகவும் கொண்டும் பிறந் தவை. ஆலிப்' என்கிறது உருது. ஆல்ஃபா' என்பது கிரீக்: ஆல்பபெட்’ என்று ஆங்கிலம் சொல்லுகிறது. ஆலோ அந்த் யகர, என்கிருர் பாணினி!...அவர் பேசிக்கொண்டே போவார். நான் கோலியாடுவதற்கு மெல்ல நழுவி விடுவேன்; புளியடி மைதானத்தில் மஜீத். வஹ்ஹாப், சிங்கார்ம் எல்லோரும் எனக் காகக் காத்திருப்பார்கள். * . , எனக்கு அவர் சொல்லிக்கொடுத்தது அதிகம் பிடபடவிஆ, என்ருலும் ஷேக்ஸாதி, ஜமாலுத்தின் ரூமி, ஃபர்தெளஸி,