பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வைத்தியநாதன் தியனகப் போனலும் 700, 800 என்று சம்பளம் வரும், கீழையூரில் என்ன வரும்படி வரும்? அந்த ஊரின் ஜனத்தொகை என்ன?” என்று அவன் காதில் விழும்படியாக மனைவியைக் கேட்டார் அவர். - சுய புத்தியோடுதான் பேசுகிறேன், மாமா! நான் வரும் படிக்காகக் கீழையூருக்குப் போகவில்லை. ஏழை ஜனங்களுக்குச் சேவை செய்வதற்காகத்தான் போகிறேன். இருபது வருஷங் களுக்கு முன் கீழையூர் ஜனத்தொகை 1500 ஆக இருந்தது இப்பொழுது 500 ஆகிவிட்டது. எதல்ை ?’’ என்று உற்சாகத் துடன் கேட்டான் சுந்தரம்.

என்னை எதற்காக அப்படிப் பார்க்கிருய்? நான்தான் ஜனங் களை அழித்துவிட்டேன் என்று நினைக்கிருயா?’ என்ருர் மாமனர்.

இல்லை, மாமா! அந்த ஊரில்சரியான சமயத்தில் வைத்திய உதவி செய்ய யாரும் இல்லாததால் அங்கு பரவிய கொள்ளை நோய்க்குப் பல மக்கள் பலியானர்கள். இவ்வாறு இனி நேராமல் தடுப்பதற்காகத்தான் நான் அங்கு போகின்றேன். வருகிற வரும் படியை வைத்துக்கொண்டு நானும் ஓர் ஏழையாகவே இருக்க உத்தேசம், ' என்று முடிவாகச் சொல்லி விட்டான், டாக்டர் சுந்தரம், ஜானகி என்ன செய்வாள், பாவம் ? தகப்பனர் பேச்சே ஏற வில்லை என்ருல், அவள் பேச்சு எப்படி ஏறும் ? ரொம்பவும் பயந்த சுபாவம் உள்ள ஜானகி ஒரு குடம் கண்ணிர் வடித்து விட்டுக் கணவனுடன் புறப்பட்டாள்.

  • 옷를 疼

ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு குழந்தை இருந்ததாம். அதற்கு பாலூ, பாலு என்று பெயராம்...... ’’ என்று அருகிலிருந்த குழந்தைக்குக் கதை சொல்லியபடியே, அதன் காலில் உள்ள சிரங்குக்கு மருந்துபோட்டுக் கட்டிக்கொண்டிருந்தான் டாக்டர் சுந்தரம். டாக்டர் சுந்தரம் கீழையூரில் குடியேறி ஒரு வாரம் கூட प्ठ्ठी,45 வில்லை, ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டான். வாசல் திண்ணதான் அவன் ஆஸ்பத்திரி, புதிதாக அந்த ஊருக்கு வைத்தியர் வந்திருக்கிருரென்று தெரிந்தால் கூட்டம் வருவதற்குக் கேட்கவா வேண்டும்? ஆனல் ஜானகிக்கு இது ஒரு பெரும் ஏமாற்றமாக இருந்தது. கணவன் நகரத்தில் வைத்தியம் செய்து அதிகப் புகழையும்