பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. சா. ராஜு. 3.25 காலிஃப், மீர் ஆகியவர்களைப் பற்றி மட்டும் இன்னும் நினைவிருக் கிறது. தாத்தாவுக்குத் தமிழ்நாட்டுச் சமய ஆசாரியர்களைப் பற்றியும் நிறையத் தெரியும். வடநாட்டுக் கஜல், கவ்வாலி, தாத்ரா, தும்ரி ஆகியவைகளில் எவ்வாறு மனத்தைப் பறிகொடுத் தாரோ, அதே அளவு ஈடுபாடு அவருக்குப் பழந்தக்க ராகத்தி லும், புற நீர்மையிலும் இருந்தது, நேநெந்து வேதகுதுாரா - நான் உன்னை எங்கே தேடுவேனடா? என்ற கீர்த்தனையின் சங்கதி வரிசைகளில் மத்திமம், தைவதம், நிஷாதம், மேல், கீழ் ஷட்ஜமம், கடைசியில் மேல் பஞ்சமம் வரையில் சென்று இறை வனைத் தியாகையர் தேடியதை அவர் விவரிக்கும்போது என் உடல் சிலிர்த்துப் போகும்; நோக்கரிய நோக்கே, நுணுக்காய நுண்ணுணர்வே என்ற திருவாசகத்தைத் திரும்பத் திரும்பக் கூறி என் இதயத்தை ஆனந் தத்தால் நிரப்பிவிடுவார். உமறுப் புலவனின் சீருப் புராணத் திற்கு ஆதாரமாக இருந்தது கம்பனின் ஆற்றுப்படலம் என்று செவிகுளிர வர்ணிப்பார்: இதையெல்லாம் எதற்காகச் சொல்லுகிறேன் என்ருல், ஒருவனுடைய இளமைப் பருவத்து நினைவுகள், சொந்த ஊர், மொழி ஆகியவை எந்த அளவு அவனை ஆட்கொண்டு விடுகின்றன என்பதை நிரூபிப்பதற்காகத்தான்; என் பாட்டனரின் கனவு நிறைவேறவில்லை. நானும் மற்ற வர்களைப் போலத்தான் படித்தேன்: வேங்கடராகவன் ரத்தின வேலு, தங்கராஜ் ஆகிய என் நண்பர்களைப் போலத்தான் நானும் பள்ளியில் எதிர்காலத்தைப் பற்றி விசேஷமான நம்பிக்கை ஏது மின்றிப்படித்தேன். எனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடியும் தறுவாயில், என் மாமா தாஜ்மல் ஹாஸ்ஸேன் பர்மாவிலிருந்து வந்தார். அவர் ஒரு ஹாஜி-அதாவது, புனித ஹஜ் யாத்திரை போய் வந்தவர். பர்மாவில் வசதியாக வாழ்ந்துவந்த அவர், அங்கு ஏற்பட்ட அரசியல் மாறுதல்களினல் சொந்த ஊருக்குத் திரும்பும்படி ஆயிற்று. அவர்தான் முதன் முதலில் இந்த யோசனையைச் சொன்னர் : “ தம்பி அஜீஸை டாக்டருக்குப் படிக்க வைக்கவேண்டும்’ என்று. நானும் ஆசைப்பட்டேன்: எதற்கு? சென்னைக்குப் போனல் நிறைய ஹிந்திப் படம் பார்க்கலாம்! இங்கே எப்போதாவது பாலக்கரைப் பக்கம் சென்ருல்தான் பார்க்கமுடியும்: மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது கஷ்டம் என்ருர்கள். மனுப்போட்டு வைத்தேன். நண்பன் வேங்கட ராகவன் நிறைய மார்க்குகள் வாங்கியிருந்தான் என்ருலும் எனக்குத்தான் இடம் கிடைத்தது. ஜனநாயக அரசியலில்