பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.26 மேஜர் ரஹ்மான் பேசுகிறேன் பிற்போக்கு இனத்தினருக்குக் கொடுக்கப்படும் சலுகை அது: கல்லூரியிலும் சுமாராகத்தான் படித்தேன் ; அதிக மதிப் பெண்கள் பெறவில்லை. பொட்டாலியமும் நைட்ரஜனும் மனித உடலில் விளைவிக்கும் மாறுதல்களைவிட, மால் கெளஸும், ஹிமன் கல்யானும் உள்ளத்தில் அதிக பலனை விளைவிக்க முடியும் என்ற என் நம்பிக்கைதான் மேன்மேலும் வலுப்பட்டது. வஞ்சகச் சீனன் அப்போதுதான் நமது வட எல்லையை முழு வலிமையுடன் தாக்கினன். நாட்டைக் காக்கும் படை வெள் ளத்தில் நானும் ஒரு சிறு துரும்பானேன். நான் பெற்றிருந்த கல்லூரிப் படிப்பின் விளைவாக எடுத்தவுடனேயே எனக்கு உயர்ந்த பதவி கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் ஹவுஸ் சர்ஜனகப் பணியாற்றிவிட்டு, ஐயன்பேட்டையில் பெயர்ப் பலகை மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படாமல், எடுத்ததுமே பெரிய ஆஸ்பத்திரியில் பணி புரியும் பெரிய வாய்ப்பு அது: நம்பவே இயலாத வசதிகள் ; பெருந்தொகை ஊதியம் ; திரும்பும்போதெல்லாம் சலாம் வைக்கும் சிப்பாய்கள்-தலை கிறுகிறுக்கத்தான் செய்தது. . . . . ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிட்ம் உறவர்டிய பிறகு எனக்குத் தோன்றியதெல்லாம் இதுதான். படை வரிசையின் கீழ்ப்படியில் உள்ளவர்களுக்குத் தேவையானது பரிவுணர்ச்சியே தவிர மருந்தல்ல, என்பதுதான் அது. நான் மருந்துச் சீட்டை எழுதும்போதெல்லாம் என் பாட்டியைத்தான் நினைத்துக் கொள்ளுவேன். அவள் கொடுப்பதெல்லாம் ஒரே மருந்துதான். மசூதியிலிருந்து வரும் நாட்டுச் சர்க்கரை - அதைத்தான் இன்ஷா அல்லா”, என்று கூறி அவள் தருவாள். பண்டார வாடைக் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வைத்தியர் எங்கள் பாட்டிதான். நர்னும் மனதிற்குள் சொல்லிக் கொள்ளுவேன். "இன்ஷா அல்லா? - இறைவனின் திருவுள்ளப்படி இந்த உல்லாச வாழ்வு நிலத்திருக்கவில்லை. ஆயிரம் படை யினர் கூடிய ரெஜிமெண்ட் ஒன்றிற்கு நான் மருத்துவகை நியமிக்கப்பட்டேன். அந்தப் படைப் பகுதி நாட்டின் வடகிழக்கு எல்லைக்குச் சென்று, அங்குள்ள மலைச் சாரலில் முகாம் இட்டது. உயர்ந்து அடர்த்தியான வனங்களிடையே நாங்கள் மூங்கில் வீடுகளில் குடியிருந்தோம். வெகு தொலைவில் கீழேயிருந்த ஒரு சுனையிலிருந்து குடி தண்ணீர் வரவேண்டும். செதில் செதிலாகப் புனிப்பாறை படர்ந்த மலைப் பிளவுகளுக்கிடையே, குளிர் உடை தரித்துக்கொண்டு, வெறும் கட்டாந்தரையைக் காவல் காக்கும் சிப்பாய்கள். இரவும், பகலும் சோர்வைத்தரும் ஒரே மாதிரி