பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. சா. ராஜா 327 யான காட்சியில் பார்வையைச் செலுத்திக் கொண்டிருக்கும் அந்த வீரச் சிலைகளே நினைக்கவே நெஞ்சு கூசுகிறது. அந்தக் காவலருக்குப் பக்கத்தில் ஒரு கணப்புச் சட்டி, கொடும் பணியினல் வெடித்து மரத்துப் போய் ரத்தம் கசிந்து நிற்கும் அந்தச் சிப்பாய்களின் புண்களை என் பணியாள் ஹர்கீரத் வெந்நீரினல் கழுவுவான். நான் மருந்தைப் பஞ்சில் தேய்த்துத் தடவுவேன். அப்போது என் அன்னையின் புண்களுக்கே மருந்திடுவது போன்ற ஒரு மெல்லுணர்ச்சி என்னைக் கவ்வும். அந்த வீரர்களுக்கு உற்ற தோழன், தாய் சகோதரி எல்லாம் நான்தான். என் பணிமகன் ஹர்கீரத் சிங், தாடியில்லாத ஒரு சீக்கியன்: நாட்டுப் பிரிவினையின்போது கலகக்காரர்களிடமிருந்து தப்பு வதற்காக வேஷம் மாறியவன். அப்படியே இருந்துவிட்டான். அமைதியே வடிவான பேருரு. அவனைக் காணும்போதெல்லாம் என் மனத்தில் பரவச உணர்ச்சி உண்டாகும். ஹர்கீரத்துக்குக் கோபம் வந்து நான் பார்த்ததே கிடையாது. சதா ஒரு பஜனைப் புத்தகத்துடன் அவனைக் காணலாம். எங்கள் படை முகாமுக்கு மறுபடியும் மாற்றல் உத்தரவு வந்தது. உடனடியாகப் பட்டாண்கோட்டிற்குப் புறப்பட்டோம். எங்கள் படையினர் காவல் புரிந்த இடத்தை அஸ்ஸாம் போலீ ஸார் ஏற்றுக் கொண்டார்கள். சர்க்கஸ் கம்பெனியைப்போல நாங்கள் குடி பெயர்ந்தோம். மறுபடியும் மெஸ் ஆடலரங்கு, ரெஃப்ரிஜிரேட்டர், ஜின், டைட் கம் மீஸ், ஹேர்டு, ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ், லாவண்டர், ஸோஷல் நைட் 1-ஆனல் இ ப் போது எனக்கு இவைகள் அவ்வளவு இதம் தரவில்லை. கட்டாயப் படுத்தப்பட்டாலொழிய மெஸ்ஸிற்குப் போவதையே நிறுத்திக்கொண்டேன். ஹர்கீரத் சிங், ஜப்ஜீயும் சுக்மணியும் படித்தான். வாரிஸ் ஷாவின் ஹீர், ராஞ்சாவைப்பற்றி எனக்குக் கூறினன். செனப் நதிக்கரையில் வாழ்ந்த அமரகாதலர்களான ஸஸ்ளிபுன்னு, மீர்ஜா ஸாஹி பான் ஆகியோர் என் கனவில் உலாவினர். அவனுடன் பேசிக் கொண்டிருப்பதே எனக்குப் பெரும் பொழுதுபோக்காக இருந்: தது; அப்போது காஷ்மீர எல்லையில் புகைந்துகொண்டிருந்த கனல் கொழுந்துவிட்டது; சற்றே பரபரப்பு-எங்கள் படை முகாமைப்பற்றிக் கவலையில்லை; நாங்கள்தான் ஓய்வில்இருக்கி ருேமே ! - -. - -- 1965 செப்டம்பர் நான்காம் தேதி என்று நினைவு: எங்கள் முகாம் இலேசாக ஆட்டம் கொடுத்தது. அண்மையில் வெடிச் சத்தம் கேட்கத் தொடங்கிற்று. நாங்கள் அம்யூனிஷன் பூட்ஸு களைத் தேடலானேம், செப்டம்பர் ஏழாம் தேதி நாங்கள்