பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 மேஜர் ரஹ்மான் பேசுகிறேன் புறப்படுவதாக முடிவாயிற்று. ஹர்கீரத்துக்கு உடல் நலம் சரி யில்லை; அவனை ரியர் பார்ட்டியில் விட்டு வரும்படி கமாண்டிங் அதிகாரி உத்தரவிட்டார். அதை ஹர்கீரத்திடம் கூறியபோது, அவனுடைய கண்கள் கலங்கின. ' காப்டன் ஸாஹிப், நான் உங்களோடு தான் வருவேன். உங்களை விட்டால் எனக்கு வேறு துணை ஏது? என்ருன் அவன், தழதழத்த குரலில் நான் நெகிழ்ந்து போய்விட்டேன். ' எனக்கு மட்டும் உன்னை விட்டால் வேறு உதவி ஏது ஹர்கீரத் ? நீ என்ளுேடு வா! உன் உடல் நிலையையும் வயதையும் எண்ணித்தான் அவ்வாறு முடிவு செய்தோம். நாம் இப்போது எங்கே போகப் போகிருேம் என்று தெரியுமல்லவா? " என்றேன் நான். ஹர்கீரத் தன்னுடைய அகலமான மோவாயைத் தடவி விட்டுக்கொண்டான். ' அது தெரிந்து என்ன ஆக வேண்டும், லாஹிப்? என்றைக்குமே நான் நாளையைப் பற்றிக் கவலைப்பட வில்லையே! இந்த நாட்டில் தர்ம ராஜ்யம் நடக்க வேண்டும் என்ருல், சுதந்திரம் பறி போகாமல் காக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு சிப்பாயும் செய்யும் பணி மகத்தானதல்லவா? ' என்று சொல்லிக்கொண்டே அவன் வானத்தை நோக்கினன். பிறகு, அவர்களுடைய துயரத்தை நீங்கள் போக்குறீர்கள். அத்தகையவர்களுக்கு என்னுல் ஆன உதவியைச் செய்கிறேன் என்ற திருப்தி மட்டும் எனக்குப் போதுமே?’ என்ருன். ஹர்கீரத்தின் தத்துவம் முழுவதும் எனக்குப் புரியவில்லை தான். என்ருலும் அவனுடைய முக பாவமும் குரலும் என்னை இளக்கிவிட்டன. 兴 弥 - இந்தப் பிராந்தியத்தில் தசராவுக்கு முந்திய பருவம் மிகவும் ரம்மியமானது. கடும் வெய்யிலின் கொடுமை தணிந்து, மழை பெய்து, புழுதி அடங்கி, குளிர் காலம் தொடங்குவதற்கான அறிகுறிகள் தலை காட்டும். வாதுமை முதிரும்; அக்ரோட் உதிரும் ; செக்கச் சிவந்த ஆப்பிள் பழங்கள் கன்னியரைப் போல் நாணிச் சிவக்கும். பப்புகோஷா, நாஷ்பதி, ப்ளம். பீச் க்ளாஸ் என்று பலவகைக் கனிகள். அவைகளைச் சுவைக்க மத்திய ஆசியாவிலிருந்து கூடப் பல வண்ணப் பறவைகள் இங்கு வரும். பீர்பஞ்சால் மலையின் உச்சியிலுள்ள மூன்று தெய்வ சிகரங்களும் இந்தப் பருவத்திற்குரிய அலங்காரமான வெண்பனி மகுடம் தரிக்கத் தயாராக நிற்கும். காற்றிலே ஒரு நைப்பு: ஈரத்தின் கனம் உயிரினம் துணையை நாடும் தாபம் எழும். அந்தந் தாபத்தை இந்தச் செனப் நதிக் கரையில் வாழ்ந்த கவிஞர்கள் அற்புதமாக வர்ணித்திருக்கிருர்கள்: ஆத்ம லயம் பெறக்கூடிய