பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. சா. ராஜு 339 பேரின் பத்திற்கு அடிக்கல்லாகச் சரீர தர்மத்தை அடிப்படை யாகக் கொண்டு, உள்ளத்தைக் கிளர்ந்தெழச் செய்யும் அழகுக் கவிதைகளை அவர்கள் யாத்தார்கள். அவற்றை மனத்தை உருக்கும் பண்களில் அமைத்துப் பாடினர்கள். இப்படி எத்தனையோ மதுர பாவக் காட்சிகளைக் கண்டுள்ள பனிநீர் ஆறு, இப்போது வேறு விதமான அனுபவத்தைப் பெற இருந்தது. நிர்வாகத் திறனும், படை அனுபவமும் கொண்ட பாகிஸ் தானின் அதிபர் இத்தகைய தவற்றைச் செய்திருக்க வேண்டாம்: சீனப் படையெடுப்பு நம்மை நிலை குலையச் செய்தது உண்மை தான். என்ருலும் அது நம்மை விழிப்படையவும் செய்து விட்டது. கட்ச் பிரதேசத்தில் நம்மைக் கலக்கி ஆழம் பார்த் தார் அயூப். நிலைமை அவருக்குச் சாதகமாக இருப்பதைப் போல் தோன்றியது. ஆகவே, சற்றும் எதிர்பாராத மூலையில் தமது படை ஆப்பைச் செலுத்தித் தேவா, சம்ப், சக்ராணு ஆகிய பகுதிகளில் இந்திய எல்லைக் காவலைத் தடுமாறச் செய்து, மனேவர் நதியைக் கடந்து, ஜெளடியான் வரையில் மின்னல் வேகத்தில் பாகிஸ்தான் படைகளை முன்னேற விட்டார். இன்னும் இரண்டு நாட்கள் தாமதித்திருந்தால் இந்திய நாட்டின் ஒரு பெரும் பகுதி துண்டாகியிருக்கும். பஞ்சாப்பைத் தாக்கும் ரகசியத் திட்டம் ஒன்றும் அவரிடம் இருந்தது. கொல்லாமைத் தத்துவத்தை மேற்கொண்ட காந்தியடிகள், சமாதான நோக்கைக் கொண்டிருந்த நேருபிரான் ஆகியோரிடம் பயிற்சி பெற்ற குற்றுருவப் பெருமகன் லால்பகதூர் சீறி எழுந் தார். வேரும் வேரடி மண்ணுமில்லாமல் வெந்து போகும் படி பகைவனைச் சாட உத்தரவிட்டார் ! மலே அசைந்தது! அது எப்படி நிகழ்ந்தது என்று என்னல் விவரிக்க இயல வில்லை. ஆனால், அது நடந்தே விட்டது. படையினரின் கவனம் எல்லாம் பாகிஸ்தானின் திசையை நோக்கியே இருந்தது? கேம்கரன், அமிர்தசரஸ், குருதாஸ்பூர், ரணபீர்சிங்புரா-இப்படிப் பல இடங்களிலிருந்து பாரதப் படைகள் முன்னேறிய வண்ணம் இருந்தன. ஒரே கோஷம் வான் அளாவிற்று : சலோ லஹோர் 1: பாகிஸ்தானிகளும் இதே மண்ணினல் ஆனவர்கள் தானே? அவர்களும் பதிலடி கொடுத்தார்கள். இந்தியப் படையினர் முன்னேற முடியாமல் டேராபாபா நானக் என்ற இடத்தில் ராவி நதிப் பாலத்தையே தகர்த் தெறிந்தார்கள், இரவோடிர