பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 மேஜர் ரஹ்மான் பேசுகிறேன் வாக அதைக்கட்டி முடித்து நதியைக் கடந்த இந்திய என்ஜினியர் படைகளே எப்படிப் புகழ்வது? என்ன கூறி வாழ்த்துவது ? பாகிஸ்தானின் களஞ்சிய நகரம் என்று கூறத் தக்க சியால் கோட் முற்றுகைக் குள்ளாகியிருந்தது. சவிண்டா என்ற கேந் திரத்தை எங்கள் ரெஜிமெண்ட் கைப்பற்றிவிட்டது. நாரோன் வால் ஸ்டேஷனும் எங்கள் கையில். சியால்கோட்டுக்கு எத்தகைய உதவியும் போக முடியாது. அங்கிருந்து யாரும் வெளியேற முடியாது. நிலையிழந்து போன பாகிஸ்தான் படை யினர் சர்வதேசப் போர் உடன்பாடுகளை மீறி, நேபாம் வெடி குண்டுகளை வானத்திலிருந்து வீசத் தொடங்கினர்கள். அவற்றி ல்ை இந்தியப் படைகளுக்கு நேர்ந்த ஆட்சேதம் கொஞ்ச நஞ்சமல்ல. உடல் முழுவதும் தீப்புண்கள் பட்டு முகாம் ஆஸ்பத்திரிக்கு வந்த வீரர்களுக்கு எங்களால் அதிக வைத்திய வசதிகூட அளிக்க முடியவில்லை ; முகாம் ஆஸ்பத்திரி அவ்வளவு சிறியது. பகலெல்லாம் நோயாளிகளைக் கவனித்துவிட்டுச் சிறிது நேரம் நாற்காலியில் அமர்வேன் நிறையச் சீனி போட்டு, ஒரு குவளைத் தேநீரை எனக்குக் கொடுப்பான் ஹர்கீரத். மாலை நெருங்கும் ; மறுபடியும் ஒரு ஸ்ட்ரெச்சர் வண்டி வரும். அதில் இருப்பவர்களை இறக்கி, மோசமான கேஸ்களைப் பெரிய ஆஸ்பத் திரிக்கு அனுப்புவதற்குள் அபாய அறிவிப்பு விட்டு விட்டு ஒலிக் கும். கையில் ஸர்ஜிகல் ஸ்பேட்டுலாவுடன் பதுங்குக் குழியில் ஒளிவேன், நீண்ட குழல் ஒலி கேட்ட பிறகுதான் வெளியே வருவேன். மறுபடியும் நோயாளிகள், முனகல், வலி, வேதனை, ரத்தம்-நின்றபடியே உறங்குவேன்; உறங்கிக்கொண்டே ஊசி போடுவேன். என்னை எந்தச் சக்தி ஊக்கிற்று ? எனக்கே தெரி யாது. என்னுடைய கைகள் இரண்டும் வேலையில் ஈடுபட்டிருக் கும் தருணத்தில் சூடான தேநீரை என் உதட்டருகில் கொண்டு வருவான் ஹர்கீரத். அதை உறிஞ்சி விட்டு மேலே பணியைத் தொடர்வேன். இறைவனி ன் கருணை இப்படித் தான் இருக்குமோ ? 兴 용 * செப்டம்பர் பதினன்கு என நினைக்கிறேன். இந்தியப்படை எதிர்பாராத முறையில் தர்க்கப்பட்டது. பெரும் சேதம் இரு தரப்பிலும். அன்று வந்த காஷவாவிடிகளில் பாகிஸ்தானி களும் இருந்தனர். அழகிய இளைஞன் ஒருவன் எனது ஆபரேஷன் மேஜையில் படுத்திருந்தான். அவனுடைய இடது தோளில் குண்டு பாய்ந்திருந்தது. ப்ளேடினல் அவனுடைய சட்டையைக் கிழித்தான் ஹர்கீரத். அங்கே ஒரு வெள்ளித் தாயத்து பள பளத்தது. அதை மெல்ல நீக்க முற்பட்டான் அவன்.