பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. சா. ராஜூ 3.31. தொடாதே 1'-அரை மயக்க நிலையிலும் அந்த வாலிபன், அதைத் தடுத்தான். ஹர்கீரத் சிங்கின் உடல் பதறிற்று. அந்த, இளைஞனின் தலையை அன்புடன் கோதிவிட்டான். அப்போது அவனுடைய ரோமங்கள் பொடித்து நின்றதை நான் கவனித் தேன். ஒரு கணம் செயலற்று நின்றுவிட்டு, வெந்நீர் கொண்டு வர உள்ளே ஒடினன். ஐந்து நிமிஷங்கள் கழிந்தன. நான் பொறுமை இழந்து பின்னறைக்குச் சென்றேன். இரு கைகளி டையே முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுத வாறு இருந்தான் ஹர்கீரத் சிங். அவன் அழுவதை நான் அன்று தான் பார்த்தேன். அதற்கு மேல் அங்கு நிற்க நேரமில்லாமல் முன்னறைக்கு வந்தேன். - துப்பாக்கி ரவை அதிக ஆழத்திலில்லை. அதை வெளியே எடுத்துக் கட்டுப் போட்டுவிட்டு, அடுத்த நோயாளியைக் கவனித்தேன். அடுத்தடுத்து அவர்கள் வந்தவண்ணமிருந்தர்ர் கள் : எனக்கு ஒய்வே இல்லை. * மறுநாள் காலை அந்த இளைஞனின் முகத்தில் தெளிவு கண்டிருந்தது. ஹர்கீரத்தின் உதவியுடன் அவனுடைய உதடு களை விலக்கி, நான் மருந்தை உள்ளே செலுத்தினேன். அவன் அதை வாயில் அடக்கி வைத்திருந்து, என் முகத்தில் 'தூ' வென்று உமிழ்ந்தான். அவனது கண்களில்தான் அப்போது எத்தனே குரூரமான பாவனை ! - - - ' என்ன அஹமத் ? ' அவனுடைய பெயர் எனக்குத் தெரிந்திருந்தது. பதறிப் போன ஹர்கீரத், ஏப்ரனின் உதவியால் என் முகத்தைத் துடைத்தான். - காஃபரின் கை தொட்டு நான் எதுவும் சாப்பிட மாட்டேன் ' என்ருன் அவன். - - " தாருல் லார்ப்-தாருல் இஸ்லாம் -எனக்கு எங்கள் ஜப்பார் தாத்தாவின் நினைவு வருகிறது. ஹர்கிரத் இள நகை புரிகிருன் :) மகனே! காப்டன் சாகிபும் இஸ்லாமானவர்தான் !" என்கிருன்: - வலது கை விரல்களை ஒன்று சேர்த்துக் குவித்து நெற்றியில் வைத்து நான் சலாம் செய்கிறேன் : . . ." ரஹம துல்லா வராகத் ! " அஹமதின் கண்கள் வியப்பினுல் மலர்கின்றன. ஆம், இந்தியாவில் முஸ்லிம்கள் எல்லாம் காலில் விலங்கு பூட்டப்