பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.32 மேஜர் ரஹ்மான் பேசுகிறேன் பட்டு உலாவுகிரு.ர்கள்’ என்று அவனுக்குப் போதனை செய்யப் பட்டிருந்தது ! இஸ்லாமானவர், இந்தியாவில் ஒரு போர்ப் படை அதிகாரி : அதுவும் முன்னணியில். பாகிஸ்தான் படையிலோ ஹிந்துக்களே கிடையாது ! அஹமதின் கண்கள் அயர்கின்றன ; ஹர்கீரத் அவனுடைய நெற்றியை வருடுகிருன்..... அப்போது நான் தங்கியிருந்தது ஒரு பள்ளிக்கூடக் கட்டிடம். சுவரில் பெரிய கரும் பலகை பதித்திருந்தது. அடுத்ததொரு சிற்றறையில் ஹர்கீரத் தங்கியிருந்தான். பல இடங்களில் சுவர் வெடித்திருந்தது. துப்பாக்கி ரவையில்ை ஏற்பட்ட துளைகள் வேறு அங்கங்கே காணப்பட்டன. மாலைத் தொழுகையை முடித்து விட்டு என் சிறிய பாயை நான் சுருட்டிக் கொண்டிருந்தேன். ஏனே எனக்கு ஹஸ்ரத் அலிகான் நினைவு வந்தது. போர்க்களத்தில் அவருடைய உடலில் ஓர் அம்பு பாய்ந்துவிட்டது. அதை நீக்கினல் அலி அவர்களுக்கு மிகுந்த வேதனையும் உதிரச் சேதமும் உண்டாகும் என்று கூட வந்திருந்த ஹக்கீம்கன் கருதினர்கள். அவர் தொழுகைக்கு அமரும் சமயத்தில் அந்த அம்பை நீக்கிவிடுவது என்று அவர்கள் முடிவு செய்தார்கள். அதாவது, ஹஸ்ரத் அவர்களுக்கு பிரார்த்தனை நேரத்தில் தன் நினைவே இராது என்பதை அவர்கள் கண்டு வைத்திருந்தார்கள். ஏக தெய்வம், ஏகாக்ரதை ஆகிய கொள்கைகளை ஒரு போர் ஆவேசத்துடன் பரப்பியதை நபிநாயகம் (ஸல்) அவர்களின் மிகப் பெரிய சாதனை என்றுதான் கூறவேண்டும். அதனல் தான் அந்தத் தரத்திற்கு மிகச் சிறிய சலனம் ஏற்படுவதையும் இஸ்லாமியர் தீவிரமாக எதிர்க்கிருர்கள். நம் நாட்டிலும் நெஞ்சில் குண்டு பட்டு ஆவி பிரியும்போது காந்தியடிகள் கூறிய கடைசி வார்த்தை ஹே ராம் ' என்பது தான். அந்த இரண்டரை அட்சரம் கடைசி வினடியில் நினைவுக்கு வர வேண்டுமானல், வாழ்நாள் முழுவதும் அதை உருப்போட்டிருக்க வேண்டும். பக்கிரி கபீர் அப்படித்தான் கூறுவார். இஸ்லாமியத் தத்துவங்களை அடியாழம் வரை ஆராய்ந்த அவர், ராம நாமத்தை டாயி அட்சர் - இரண்டரை அட்சரம் என்றுதான் குறிப்பிடுவார். என்னைப் பொறுத்த வரையில் அத்தகைய ஒரு முனைப் பாங்கு ஏதும் என்னிடம் கிடையாது. ஆனால், தொழுகை முடிந்தபின்னர் மனத்தில் மண்மிக்க நல்லெண்ணங்கள் தோன்றுவது வழக்கம். ஆனல் தொழுகையின் போதோ?-அது ஒரு தனி அத்தியாயம்..