பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. சா. ராஜா 333 ள்ெளி வராந்தாவிலே நிழல் ஆடிற்று. செண்ட்ரி உள்ளே வந்து ஸ்லாம் வைத்தான் ஸாஹிப், யாரோ ஒரு புர்க்கா ஸ்திரீ வந்திருக்கிருள் உங்களை உடனடியாகப் பார்க்க வேண்டு மாம் ! என்ருன், எனக்கு வியப்பாக இருந்தது. பாசறை முன்னிரவு நேரம். என்னைப்பார்க்க ஒரு பெண் !... என் அறையில் அப்போது ஒரே ஒரு மெழுகுவத்தி மட்டும் எரிந்துகொண்டிருந்தது. என்னை அவள் எதற்காகப் பார்க்க வேண்டும் ?... * கூட யாரும் இல்லையா : ' என் நாவு ஏனே தடுமாறுகிறது. ஒரு சிறு பையனும் வந்திருக்கிருன் ! ’’ நான் நெட்டுயிர்க்கிறேன். உள்ளே வரச்சொல் ' முதலில் ஒரு சிறுவன் உள்ளே வந்து உடலை வளைத்துத் தன் பிஞ்சுக் கரங்களால் வணக்கம் தெரிவித்தான். ஜரிகை தைத்த மெல்லிய மஸ்லின் குர்த்தா. அதனுள்ளிருந்து இடது கையில் ஒரு தாயத்து தெளிவாகப் புலப்படுகிறது. தலையில் பெரிய ஃபெஸ் தொப்பி. அவனுக்குப் பின்னல் பர்தா அணிந்த மாது, மருக்கொழுந்தின் இனிய மணம்; அவளுடைய கால் களில் அழகிய செருப்புக்கள் : செம்பஞ்சுக் குழம்பு பூசிய சந்தன. வண்ணப் பாதங்களில் வெள்ளி ஆபரணங்கள்... நான் எழுந்து நிற்கிறேன். அறையில், என் முகாம் கட்டிலைத் தவிர ஒரே ஒரு ஸ்டுல் மட்டும் உள்ளது. முகத்திற்கு முன்ன விருந்த வலைச் சன்னல் வழியாக அவள் என்னைப் பார்த்துப் பேசுகிருள்: 'ஐயா, எனக்கு உங்கள் அனுமதி வேண்டும். என் தம்பி அஹமதை நான் பார்க்க வேண்டும் ! ’’ - எடுத்தவுடனேயே வந்த காரியத்தைப்பற்றிக் கூறுகிருள் அவள். ' உட்கார்ந்துகொண்டு பேசலாமே? ' நான் பணிவுடன் என் கட்டிலைக் காட்டுகிறேன்; அவள் அந்தச் சிறுவனுடன் அமர்கிருள்.