பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸ்ந்தன் 17 பொருளையும் சம்பாதிப்பான், தானும் நல்ல ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்த ஜானகிக்குத் தன் கணவனின் கிராம சேவைப் பித்து கொஞ்சமும் பிடிக்கவில்லை. தன் மனத்தில் உள்ள ஆசைகளைத் தன் கணவன் புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்றி வைக்கவில்லையே என்று ஏங்கினுள் ஜானகி.

  • 张 兴

கீழையூர் நல்ல கத்திரிக்காய்களுக்குப் பெயர் போனது; டாக்டர் சுந்தரத்தின் நோயாளிகள் அவனுக்குக் கூடை கூடை யாகக் கத்திரிக்காய்களைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். இதல்ை அவனுக்குக் கத்திரிக்காய் டாக்டர் ' என்ற பெயர் ஏற்பட்டது ! ஒரு நாள் ஜானகி அருகில் மலைமேலுள்ள முருகர் கோவிலுக் குச் சென்ருள். அங்கே சில பெண்கள் அவளைக் கண்டதும், அதோ பார் ! கத்திரிக்காய் டாக்டரின் மனைவி வருகிருள்! " என்று கூறியது ஜானகியின் காதில் விழுந்தது. அப்பொழுதே அவளுக்கு நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம் போலிருந்தது. கோபத்துடன் அவள் வீடு திரும்பினள். நாளாக, ஆக, டாக்டர் சுந்தரம் வீட்டில் தங்குவதே இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் ஒரு நிமிஷம் கூட அவரை, வீட்டில் விட்டு வைப்பதில்லை. இந்நேரத்தில் ஜானகி வியாதிக்கு உள்ளாகிப் படுத்தபடுக்கை யாளுள். ஆகாரம் செல்லாமல் அவள் உடல் இளைத்துக் கொண்டே வந்தது. மனைவிக்கு மனேவியாதிதான் என்று சுந்தரத்துக்குத் தெரியும். அந்த ஊரைவிட்டுப் போனுல்தான் அவள் வியாதி குணமாகும் என்பதை அவன் அறிவான். அவன் ஊரைவிட்டுப் போனல் பலர் உடம்பு குணமாகாமல் போகும். மனைவிக்குத் தன் கடமையைச் செய்ய ஊரைவிட்டே போவதா ? நோயால் வாடும் கள்ளமில்லா உள்ளம்கொண்ட ஏழை கிராம மக்களுக்காக அவ்வூரிலேயே தங்கித் தன் கடமையைச் செய்வதா? ஒரு நாள் ஜானகி, ' நான் இங்கே இனிமேல் இருக்கமாட் டேன். நாம் பட்டணத்துக்கே போய்விடுவோம், வாருங்கள், ! என்று சுந்தரத்திடம் கூறினுள். அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டு சுந்தரம் மூட்டை கட்டினன். டாக்டர் சுந்தரம் ஊரைவிட்டுப் போகும் செய்தி எங்கும் பரவிவிட்டது. நோயாளிகள் சுந்தரத்தைப் பார்க்க விரைந்து வந்தார்கள். டாக்டர் புறப்படும் நேரமும் வந்தது. $гт—~2