பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. சா. ராஜா 335 மறு நாள் பிற்பகலில் வந்தால் தப்பி அஹமதைச் சந்திக்க லாம் என்று கூறி, ரெஹானவை அனுப்ப முற்பட்டேன். சிறுவன் எழுந்திருந்து தலையைக் குனிந்து வலது கையை நெற்றிக்கு உயர்த்தினான்: ' குதா ஹாஃபீஸ் சாச்சாஜி ' குதா ஹாஃபீஸ் ! உன் பெயரை எனக்குச் சொல்லவே யில்லையே ? ?" அவனுடைய முதுகை வருடினேன். ' என் பெயர் இப்ராஹிம்! " ரெஹானவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான் அவன். வெளி வேலிவரை சென்று அவர்களை வழி அனுப்பி விட்டுத் திரும்பி வந்தேன். ஹர்கீரத் சிங் மெழுகுவத்தி வெளிச் சத்தில் ராகம் போட்டுக் குருவானியைப் படித்துக் கொண்டிருந் தான். அவனுடைய வலது கை, தன் இடது தோளிலிருந்த தாயத்தைத் தடவிய வண்ணமிருந்தது. ‘'தேஹோ ஷிவா (ஹ்)வர் மோஹே யஹே ஷூப் கர்மண் தே கப்ஹூ நடரு(ன்). ’’ ( உலக நன்மைக்கான நற்பணிகளைச் செய்ய முற்படும் போது எத்தகைய தயக்கமும் எனக்கு ஏற்படாதிருக்க அருள் இறைவா! -குரு கோவிந்தர்.) மற்ற நாட்களாக இருந்தால் நானும் அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளுவேன். அவன் பாபா நானக்கின் பேருரைகளை உணர்ச்சி பொங்கப் படித்துக்காட்டுவான். ஸத்ளு, ஃபரீத், மர்தான, பாலா ஆகிய இஸ்லாமியர்கள்கூட அவருக்குச் சீடர்களாக ஆன விவரத்தை அவன் எனக்குக் கூறும்போது அவனுடைய கண்கள் கலங்கிவிடும். ஃபரீதின் மணி மொழிகள் கூட. குரு கிரந்த சாஹிப்பில் உள்ளன என்று அவன் பெருமை யோடு கூறுவான். அப்போது அவனுடைய விழிகள் கண்ணிரில் மிதக்கும். . . . . " . . . . . ஆளுல் இன்று என் மனம் ஒரு நிலையில் இல்லை. செனப் நதி சுழிப்புடன் ஒடும் காட்சிதான் தென்பட்டது. கட்டிலில் படுத்தேன்; இரவு முழுவதும் நான் உறங்கவே இல்லை. -