பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 மேஜர் ரஹ்மான் பேசுகிறேன் போர் உச்ச நிலையை அடைந்தது! தனது நெஞ்சில் வந்து உட்கார்ந்து சதையைப் பிருண்டிக் கொண்டிருக்கும் பாரதப் படைகளை எப்படியாவது விலக்கிவிட வேண்டும் என்று பாகிஸ்தான் தீவிரமாக முயன்று பார்த்தது. அந்த முயற்சியில் அது இழந்த படைக்கலன்கள் கொஞ்ச நஞ்ச மல்ல ; ஐ. ந. ாவின் செயலாளர் இந்தத் துணைக் கண்டத்திற்கு வந்து நிராசையுடன் திரும்பிச் சென்ருர், வெற்றியடைந்த நிலையிலும் இந்தியா போர் நிறுத்தத்திற்குத் தயார் என்று உலகிற்கு அறிவித்துத் தன் பெருந்தன்மையைக் காட்டிக் கொண்டது. ஆனல் காயமடைந்த புலியோ, படுத்தவாறே சீறிற்று. நிணம், தீ, உதிரம், பேயரவம், இடி பாரதம் அங் குலம் அங்குலமாகப் பாகிஸ்தானிய மண்ணில் முன்னேறிற்று: - ஹர்கீரத் சிங்கின் நடத்தையில் சிறிய மாறுதலைக் கண் டேன். அவன் ஒரு போதும் பாசறை முகாமை விட்டு வெளி யேறுவது வழக்கமில்லை. ஆனால் தற்போது அவன் மாலையில் படை வீட்டிற்குள் தங்குவதில்லை. எங்கே போகிருனென்றும் தெரியாது. ஆல்ை அவன் திருப்பி வரும்போது அவனுடைய முகத்தில் அசாதாரணமானதோர். அமைதி நிலவக் கண்டேன்; அவனது செயல்களில் ஒரு புதிய வேகம் மிளிர்வதைப் பார்த் தேன். இரவு வேளையில் அவன் மெழுகுவத்தியின் ஒளியில் வெகு நேரம் வரை படித்துக்கொண்டிருந்தான். குரு கோவிந்த ரின் அந்த வேண்டுகொள் என் மனதிற்குள் புகுந்து ரீங்கார மிட்டது. அத்ஹி ரண்மே தப் இயூஜ் மரு(ன்)."

  1. 兴 特

செப்டம்பர் இருபத்து நாலு. கடைசியாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது. அது ஏற்படப் போகிறது என்று தெரிந் தும், அந்தக் கடைசி எல்லே நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன்பு நிராதரவான அமிர்தஸ்ரஸ் குடிகளின்மீது குண்டு மழை பொழிந்தது. பாகிஸ்தான். ஆனலும் பாஞ்சாலம் கலங்கவில்லை. சிக்கந்தரின் நாளிலிருந்து எத்தனை எதிரிகளை அது சமாளித்திருக் கிறது ! எங்களைச் சுற்றியிருந்த இரும்பு வளையம் சற்றே தளர்ந்தது. இரவில் பிரகாசமான விளக்குகள், ரேடியோ-படை வீரர்கள் முகாமை விட்டுச் சற்று விலகி, விளை நிலங்கள் வரை சென்று உலாவி வர அனுமதி, - -