பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி. சா. ராஜா 3.37 எங்கள் படைத் தலைவர் வெகு கண்டிப்பான பேர்வழி. பாகிஸ்தானி கிராமவாசிகளுக்கோ, அவர்களுடைய பயிர்வகை, கன்று காலிகளுக்கோ, தம் படையினர் எத்தகைய ஊறும் விளைவிக்கக் கூடாது என்ற கொள்கையைத் தீவிரமாகக் கடைப் பிடித்து வந்தார். எங்கள் முகாமைச் சுற்றி முற்றிய கதிருள்ள விளை நிலங்கள். வல்லியான் கிராமத்தின் நம்பர்தார் வயல்களை அறுவடை செய்துகொள்ள அனுமதி வேண்டினர். உடனடி யாக அதை அளித்ததுடன், அவற்றைக் கிராமத்தினுள் கொண்டு சேர்க்க வாகன உதவியும் தந்தார், எங்கள் டிவிஷன் கமாண்டர். செப்டம்பர் முப்பது. போர் நின்றுவிட்டாலும் அந்தச் சூழ்நிலை முற்றிலும் விலகவில்லை. இரு தரப்பிலும் மறுபடியும் பொறி விழுந்து தீப்பற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்று எனக்குக் கவலைதான் ! அன்று மாலை நான் கேஸ் குறிப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, ஏதோ ஒரு மருத்துவ வார்த்தையின் அர்த்தத்தில் சந்தேகம் வந்தது. அதைக் குறித்து எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் என்னையறியாமலேயே வலது கை ஏதோ கிறுக்கிற்று. சரியாகச் சீர் செய்யப் பெருத குழல் கற்றைகள், பிறை நிலா துதல், வாதுமைக் கண்கள், காஷ்மீர நாசி, செப்பு வாய், செதுக்கி எடுத்த தாவாங்கட்டை, சங்குக் கழுத்து, செழுந்தோள்கள், கம்மீஸிலிருந்து விம்மிப் புடைத்த தனங்கள், ஒடுங்கிய இடை - சே, இதென்ன? மனத்தின் அடியாழத்தில் புதைந்த எண்ணம் எந்த வகையிலாவது வெளிப்பட்டே தீர் கிறது. ரெஹானவை அதற்குப் பிறகு ஒரே ஒருதரம்தான் பார்த்தேன். அதாவது மறுநாள் தன் தம்பியைக் காண வந்தபோது. அடுத்த இரண்டு நாட்களில் மற்றக் கைதிகளுடன் அஹமதையும் டெல்லிக்கு அனுப்பி விட்டேன். என்ருலும் அவளுடைய உருவம் நெஞ்சிலிருந்து நீங்கவில்லை ! - டாக்டர் ஸாஹிப் ! ’’ வெளியே பரபரப்பான குரல் கேட்டது. திடுகிட்டு எழுந்து ஒடினேன். சுபேதார் அட்ஜுடண்ட் கையைப் பிசைந்தவாறு நின்றுகொண்டிருந்தார். அவருடைய உடல் நடுங்கிற்று. ஐயா, நிராயுதபாணியாக உலாவச் சென்ற ஹர்கிரத் சிங்கின்மேல் யாரோ குறி பார்த்துச் சுட்டுவிட்டார்கள். அது உள்ளூர் வாசியாகத்தானிருக்க வேண்டும். : --- - - ೯. மனம் தவித்தது. ' எங்கே ೨aಿ? கொண்டு வந்திருக் கிறீர்களா?' என்றேன். - கா-22