பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 மேஜர் ரஹ்மான் பேசுகிறேன் இல்லை! அட்ஜுடண்ட் ஆத்மராம் கூறினர் : “ அவன் வர மறுத்து விட்டான். விலாவில் குண்டு பாய்ந்திருக்கிறது. ஒரே உதிர வெள்ளம். ஊருக்கு வெளியே இருக்கும் கல்லறைகளின் பக்கத் தில் அவன் கிடக்கிருன். என்னே இங்கேயே சாகவிடுங்கள்; நான் பிழைக்க மாட்டேன் என்று கூறுகிருன் என்ருர் அவர், நான் ஓடுகிறேன்; என்னைப் பலர் பின் தொடருகின்றனர். நீல ஆகாயத்திலிருந்து பஞ்சு மேகம் ஒன்று இளஞ் சிவப்பு நுனியுடன் பசுமலையைத் தழுவ வருகிறது. ஹர்கீரத் சிங் சலனமின்றிக் கிடந்தான். அவனுடைய முகத்தில் எத்தகைய கடூரமான பாவனையும் இல்லை. அவனது தலைப்புறத்தில் ஒரு கல்லறை; அதன் மேல் நட்டிருந்த சலவைக் கல்லில் உருது மொழி எழுத்துக்கள். அதைப் படித்ததும் என் வயிற்றில் குழி விழுகிறது. ஷரீன் ஹர்கீரத் சிங்கை எப்படி அடக்கம் செய்வது என்பதைப் பற்றி எங்கள் முகாமில் சிறு விவாதம் எழுந்தது. இறுதியில் எனது முடிவைப் படைத் தலைவர் ஏற்றுக் கொண்டார். அவ னுடைய உடலைத் தகனம் செய்து அஸ்தியின் சிறு பகுதியை செனப் நதியில் கரைத்தோம். மிகுதியை ஒரு செப்புக் கலசத்தி லிட்டு, ஷரீனின் கல்லரைக்குப் பக்கத்திலேயே புதைத்து, இன்னும் ஓர் அழகிய கட்டிடம் கட்டினர்கள் ராணுவ எஞ்ஜினி யர் படையினர். - ஃபர்தெளஸியின் கவிதை வாசகம் ஒன்றை அதில் பொறிக்கச் செய்தேன் நான் : அன்பு-எந்த வடிவிலிருந்தாலும் சரி, அதுதான் ஆண்ட வனின் செயல் முறை : ' ஹர்கீரத் சிங், தன் கையில் தரித்திருந்த தாயத்தை மட்டும் நான் என்னுடன் வைத்துக் கொண்டுவிட்டேன். தேஹேர் ஷிவாஹ் வர் மேஹே யஹே... ! ? இனி மேஜர் ரஹ்மான் பேசுகிலேன் ! .