பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. ஜயலக்ஷ்மி 32 எது வெற்றி? பகல் மணி பதினென்று இருக்கும். வேலையெல்லாம் முடிந்துவிட்டபடியால் ஓய்வாகப் பத்திரிகை களை எடுத்து வைத்துக் கொண்டு படிக்க உட்கார்ந்தேன். தபதபவென்று யாரோ தெருக் கதவைத் தட்டுகிற ஓசை கேட்டது. எழுந்துபோய்க் கதவைத் திறந்தேன். " ஜயம் தாண்டி !' நல்ல வேளை. எப்படியோ வீட்டைக் கண்டுபிடித்து விட்டோம் !' வந்திருந்தவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாராட் டுரை வழங்கிக் கொண்ட பிறகுதான் எனக்கு முக தெரிசனம் தந்தார்கள். எனக்குச் சிறிது குழப்பம். மிகவும் தெரிந்த முகம் போலவும் இருந்தது. எப்போதோ பார்த்தது போலவும் இருந்தது. இவர்கள் யார்? என் விழிகளில் நெளிந்த வினக்குறி அவர்களின் சூட்சுமப் பார்வைக்குப் புலப்பட்டிருக்க வேண்டும். என்னமோ முழிக்கிருயே: எங்களைத் தெரியவில்லையா ? எங்களுக்கு மன்னர்குடி இவள் என் தங்கை ருக்கு. என் பெயர்...' - ரங்கம் தானே!" நினைவு வந்துவிட்டப் பெருமிதம் என்னைப் பூரிக்க வைத்தது.