பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 எது வெற்றி : பரவாயில்லையே...ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிருய். பட்டணத்து வாசம், பங்களா வாழ்வு, நாகரீகத் தோற்றம், எல்லாம் எங்களை மறந்துவிடவில்லை. ரொம்ப சந்தோஷம் என்ருள் ரங்கம். ' உள்ளே வாருங்கள். பிஞ்சுப் பருவத்தில் பழகிய பசுமை யான நினைவுகள் சிறிது மெருகு குன்றி வேண்டுமானல் போகுமே தவிர, அடியோடு ஒருபோதும் மறந்து போகாது ரங்கம். உன்னுடைய இந்தக் கிழ வேஷம் தான் என்னைக் கொஞ்சம் தடுமாற வைத்துவிட்டது... ' என்றேன் அவர்களே உட்பக்கம் அழைத்தபடியே, அவள் பதினெட்டு முழம் புடவையைக் கொசு வம் வைத்து உடுத்தியிருந்தாள். ஒரு வருஷமா, இரண்டு வருஷமா? இருபது வருஷங்கள். நினைவு வைத்துக்கொள்வது கஷ்டம்தான் ஜயம். நீ இந்த ஊருக்குத் தகுந்தபடி இருக்கிருய். மன்னர்குடியில் இப்படி யிருக்க முடியுமா ? அது சரி, வீடு நிசப்தமாக இருக்கிறதே. குழந்தை குட்டி'...என்று இழுத்தாற்போல் வினவினுள் ருக்கு. நிறைய இருக்கிறது. எல்லோரும் பள்ளிக் கூடத்திற்குப் போயிருக்கிரு.ர்கள். இந்த நேரம்தான் எனக்குக் கொஞ்சம் ஒய்வு . நிறைய என்ருல் எத்தனே? ருக்கு தான் கேட்டாள்.

நான்கு, அதிகம் தானே ' என்றேன் நான்.

நான் ஒப்புக் கொள்ளமாட்டேன் ஜயம் எனக்கு ஒரே ஒரு பையன்தான். ருக்குவுக்கு அதுகூட இல்லை. எங்களுக்கு இன்னமும் ஆசை விடவில்லை. குறைதான்' என்று கூறினுள் ரங்கம். அவள் வார்த்தைகளைவிட குரலில் அளவு கடந்த ஏக்கம் பிரதிபலித்தது. - 'அதிருக்கட்டும். எங்கே இப்படி மன்னர்குடியிலிருந்து இவ்வளவு தூரம் ?' என்று வினவினேன் நான். அவர்களுக்கு உட்காரப் பாயை விரித்துப் போட்டுக் கொண்டே. ருக்கு இங்கேதான் நுங்கம்பாக்கத்தில் இருக்கிருள். எத்தனையோ தடவைகள் பட்டணத்துக்கு வந்து போயிருக் கிறேன். ஒவ்வொரு தடவை வரும்போதும் உன் அத்தையிட மிருந்து உன் விலாசத்தைக் கேட்டுக் கொண்டுதான் வருவேன். ஆனல் வந்ததே @ುಶಿನ, '. • 、資澎 ஏனம்?" r நீ கதையெல்லாம் எமுதுகிருயாமே ! பேப்பரிலே எல்லாம் உன் ப்டம் வந்ததைப் பார்த்தேன். நீ ரொம்பப் பெரிய மனுவி