பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 எது வெற்றி ? 'ஏன் இவ்வளவு ஆச்சர்யப்படுகிருய் ஜயம். இந்தக் காலத் தில் இது ஒரு அதிசயமா ? ' என்ருள் ருக்கு. இல்லையில்லை. கோமளவல்லியின் குடும்பம் ரொம்பவும்..." "ஆசாரசீலர்கள் தான், ஆளுல் இது இவளாகக் காலேஜில் ஏற்பட்ட பழக்கத்தின் பேரில் செய்து கொண்டது...' பெற்றேர்களின் விரோதத்தின் பேரில்தானே...?? பட்டணத்தில் இருந்துகொண்டு நீ இப்படிப் பட்டிக்காடு மாதிரிப் பேசுகிருயே ஜயம்? ' ரங்கத்திற்கு ஆச்சர்யமாக இருந் தது என் கேள்வி. - கலப்பு மணங்கள் உனக்குப் பிடிக்காது போலிருக்கிறது..." சிரித்துக்கொண்டே கூறினுள் ருக்கு, ' சே சே ரொம்பப் பிடிக்கும். சமுதாயத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளையும் பழக்க வழக்கங்களையும் சமனப்படுத்த உதவு கிறது என்கிற முறையில் எனக்கு அது பிடித்தமானதுதான். ' என்று கூறினேன். ، ، p, ລrou. மாம்பலம் இதோதானே இருக்கிறது. போய் வந்துவிடலாம்...' என்று கூறி, எழுந்தாள் ரங்கம். டிபன்-காபி சாப்பிட்டு விட்டுப் போகலாமே... ' என் றேன். - - 'மணி பதினென்றரை தானே ஆகிறது, போய் வந்து பின் சாப்பிட்டால் போதும் ' என்ருள் ருக்கு. குழந்தைகள் எல்லோரும் கையில் சாப்பாடு கொண்டு போயிருந்ததால் நானும் அவர்களுடைய அழைப்புக்கு இணங்கிப் புறப்பட்டேன். $ 势 ஓ ! நீங்களா! வாங்க, வாங்க" என்றபடி ஓடிவந்து வர வேற்ருள் கோமளவல்லி. உடம்பெல்லாம் தெரியும்படியான நைலான் புடவை, வாரப்படாத பரட்டைத்தலை, பொட்டில் லாத நெற்றி, மெட்டியில்லாத கால்கள். இவளா கோமளவல்லி? இது யாரென்று தெரிகிறதா கோமு, நம்ப ஜயம் என்று என்ன அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் ரங்கம். - நம்ப ஜயமா? வா, ஜயம் 1 ரொம்ப மாறிட்டியே * * என்று புன்முறுவல் செய்தாள் கோமளவல்லி.