பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. ஜயலக்ஷ்மி 3.43 அவளைப் பின் தொடர்ந்து நாங்கள் மூவரும் வீட்டி னுள்ளே சென்ருேம். கருவாட்டின் மணம் குப்பென்று மணம் வீசி எங்களை வரவேற்றது, வீடெல்லாம் ஒரே கோழிகளின் அசுத்தப் பொருட்களின் நெடி வேறு. ' குந்துங்க. இதோ வந்துவிட்டேன். ஒரு எண்னேச் சிக்குப் பிடித்த பாயை விரித்து எங்களை உட்கார வைத்துவிட்டு உள்ளே போளுள் கோமளவல்லி. 'இதென்ன இப்படிப் பேசுகிருள் இவள் ! ரங்கத்தைப் பார்த்து மெல்லிய குரலில் வினவினேன் நான். நான்பிராமினைக் கல்யாணம் செய்துகொண்டிருக்கிருள் இல்லையா? அதல்ை இவளும் நான்பிராமிகை ஆகிவிட்டாள். இதுதானே பாரதப்பெண்களின் தனிப் பண்பு? ' என்று என் னேயே திருப்பிக்கேட்டாள் ரங்கம். நான் முகத்தைச் சுளித்தேன். இதற்குள் கோமளவல்லி எங்களிடம் வந்துவிட்டாள். காபி போடட்டுமா ? நீங்களெல்லாம் சாப்பிடுவீங்களா? ' என்று சிரித்துக்கொண்டே கேட்டாள். " மன்னர் குடியில் உங்கள் வீட்டுக் காப்பிக்குத் தனிப் பெயராச்சே 1 என்றேன் நான். அவளுடைய மனத்தில் சகஜ நிலையை ஏற்படுத்துகிற நோக்கத்துடன். " அந்த வீட்டுப் பழக்க வழக்கங்களில் இங்கே ஒன்றுகூடக் கிடையாது ஜயம். இங்கே வந்ததும் நான் எல்லாவற்றிலும் ரொம்ப மாறிவிட்டேன். சுருக்கமாகச் சொல்லனும்ன...நான்... நான்...நானும் இப்போது ஒரு நான்பிராமின் பெண்மணி தான்’ என்று கூறிள்ை கோமளவல்லி. சாதியைப் பற்றி விட்டுவிடுவோம். பழக்க வழக்கங்களால் தான் ஏற்றமும் தாழ்வும் நம்மிடையே உண்டாகிறது என்பது என் கருத்து' என்று ரொம்பவும் அழுத்தமாகக் கூறினேன் நான். உண்மைதான் ஜயம் ! ஆனால்...கணவனுக்காக எல்லா வற்றையும் தியாகம் செய்வதுதானே இந்தியப் பண்பு? அந்தப் பெண்மையின் பண்புப்படி, நான் அவருடன் அவருடைய இயல்' புடன்-அவருடைய பழக்க வழக்கங்களுடன் இரண்டறக் கலந்து விட்டேன். அதிகமாக விவரிப்பானேன்? நான் இப்போது அசைவ உணவுகள் கூடச் சாப்பிடுகிறேன்......போதுமா?" என்ருள் கோமளவல்லி, . -