பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 எது வெற்றி ? நான் பேசவில்லை; "ஆச்சர்யம்தான் ! ' என்ருள் ரங்கம்.

  • ஸ்டோர் ரூமில் அடுக்கடுக்காக அடுக்கி வைத்திருக்கிற

பானை வரிசைகளைப் பார்த்தாலே தெரிகிறதே !' என்ருள் ருக்கு, " ஆமாம் ருக்கு அவருக்கு என்னே மணந்து கொண்டதால் எந்த ஒரு விதமான மாறுபாடும் தெரியக்கூடாது என்பதே என் லட்சியம். அந்த என் லட்சியத்தில் நான் வெற்றி பெற்று விட்டதாகவே எண்ணுகிறேன்...” இதைச் சொல்லிவிட்டு எங்கள் எதிரிலேயே காபி போடத் தொடங்கினுள் கோமளவல்லி. ஸ்டவ்வைப் பற்றவைத்து, அதில் ஒரு அலுமினியம் டேக்ஸா'வில் தண்ணிரைக் கொதிக்க வைத்தாள். பிறகு அதில் காபித்துரளேக் கொட்டி-வடிகட்டினுள். பிறகு பாலும் சர்க்கரையும் சேர்த்து அதிவிரைவில் எங்கள் முன் காபியைக் கொண்டுவந்து வைத்துவிட்டாள் கோமளவல்லி. நீலம் பாரித்துக் கிடந்த அந்தக் காபியைப் பார்க்கவே எனக்கு அருவருப்பாக இருந்தது. நான் காபி சாப்பிடுவதில்லை கோமு என்று கூறினேன் உள்ளத்தின் அருவருப்பை முகத்தில் காட்டாமல், ஆசாரமா?’ என்று வினவினுள் கோமளவல்லி. அதெல்லாமில்லை; மோர் கொடு, சாப்பிடுகிேpه - y என்றேன்: மோர் கொண்டுவந்து கொடுத்தாள் குடித்து வைத்தேன் அரைமனத்தோடு, அதில்கூட அசைவ உணவின் வாடை அடிப்பதுபோல் ஒரு பிரமை எனக்கு: போகலாமே...' என்றேன் ருக்குரங்கத்தைப் பார்த்து, போகவேண்டியதுதான். நேரமாச்சு.’ இருவருமே எழுந்து விட்டார்கள். அவர்கள் எப்படியோ அந்தக் காபியைக் குடித்திருக்கிரு.ர்கள். என் விட்டுக்கு எப்போது வரப்போகிருய் கோமு !' என்று வினவினுள் ருக்கு. வரேன் ருக்கு கோவிச்சுக்காதே! " என்ருள் கோமள வல்லி. - - -