பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வைத்தியநாதன் நீங்கள் எங்களை விட்டுப் போகிறீர்களா? ' என்று கூறி கிராம மக்கள் கண்ணிர் வடித்தார்கள். டாக்டர் சுந்தரம் அவர் களிடம் விடைபெற்றுக்கொண்டபோது அவன் கண் கலங்கியது, உள்ளம் துடித்தது. இதையெல்லாம் பார்த்த ஜானகியின் உள்ளமும் உருகியது. அவள் திடீரென்று மூர்ச்சை போட்டுக் கீழே சாய்ந்தாள். ஜானகி கண்ணே விழித்துக் கொண்டபோது, பெரிய படுக்கை யில், விசாலமான ஓர் அறையில் படுத்துக்கொண்டிருந்தாள். நான் எங்கே இருக்கிறேன் ?’ என்ருள் அவள். பட்டணத்தில்தான்,' என்ருன் சுந்தரம். அந்த நாசமாய்ப்போகிற கிராமத்தைவிட்டு நாம் வந்து விட்டோமல்லவா? ' என்ருள் ஜானகி. " ஆமாம், அதன் முகத்தில் இனி நாம் விழிக்கவேண்டாம், ’’ என்ருன் சுந்தரம். பல வாரங்கள் கழிந்தன. ஜானகியின் உடம்பு குணமாகி வந்தது. மெதுவாக எழுந்து நடமாட ஆரம்பித்தாள். ஒரு நாள் சுந்தரம் வீட்டிவில்லை. வேலைக்காரியிடம், ' நான் கொஞ்ச தூரம் நடந்து போய்விட்டு வருகிறேனே! ' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினுள் ஜானகி. வேண்டாம் அம்மா! உங்களால் முடியாது. வெளியில் வரக்கூடாது என்று ஐயா சொல்லியிருக்கிருர் ! ' என்று வேலைக்காரி சொன்னதை அவள் பொருட்படுத்தவில்லை. . இரண்டடி எடுத்துவைத்த ஜானகி, சற்று தூரத்தில் மலையை யும், முருகர் கோவிலையும் பர்ர்த்துவிட்டுத் திடுக்கிட்டு நின்ருள். இது எந்த ஊர்? நான் எங்கே இருக்கிறேன்? சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே சிறிது தூரம் நடந்த தும், அவளுக்குப்பழகின இடமாக இருந்தது. எதிரே ஒரு வீட்டில் ஏகக்கூட்டம் 1 ஆம் அவள் இருப்பது கீழையூர்தான் ! அவள் பட்டிணத்தில் இருப்பதாகச் சொன்னது சுத்தப்பொய் ! கூட்டமாக இருந்த வீட்டை நோக்கி அவள் சென்ருள். அங்கே ஒரு சிறுவனின் பக்கத்தில் டாக்டர் சுந்தரம் உட்கார்ந்து அவனைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். . . . ஜானகி அமைதியாக அவன் அருகில் சென்று நின்ருள். அவளைக் கண்ட சுந்தரம் திடுக்கிட்டு, " ஜானகி, நீ இங்கே ஏன் வந்தாய்? ' என்ருன். - - - -