பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. ஜயலக்ஷ்மி 345 நாங்கள் மூவரும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்: ஒரு குங்குமம் கூட எங்களுக்கு வழங்கவில்லை கோமளவல்லி. மன்னர்குடியில் அவளுடைய பிறந்தகத்துக்குப் போனல்... அவளுடைய அம்மா தேங்காய் இல்லாமல் வெறும் வெற்றிலைப் பாக்குக்கூடக் கொடுக்கமாட்டாள். அவளுடைய பெண்தான் இவள். அவள் மறந்து விட்டாள். ஆனல் என்னல் மறக்க முடியவில்லையே ! " இருந்தாலும் நீ ரொம்பமோசம் ஜயம். காபியைத் தொடவேயில்லையே! அவள் ஏதாவது நினைத்துக் கொண் டால்...? ' என்ருள் ரங்கம் என்னைக் குற்றம் சாட்டுகிற பாவனையில். - நினைத்துக் கொள்ளட்டும்...ஏன், ரங்கம் ! பில்டர் வைத்து நல்லமுறையில் போட்டுத் தருகிற நல்ல காபியை அவளுடைய கணவர் சாப்பிடமாட்டாரா ? அவர் ஹோட்டலில் இதுபோன்ற காபியைப் பார்த்திருக்க முடியாதே ! என்றேன் ஆத்திரம் மேலிட, " உனக்கு நாக்கு ருசி ரொம்ப அதிகமடி! அவள் தான் நான் அடியோடு மாறிவிட்டேன் என்கிருளே ! என்ருள் ரங்கம் . "இந்த மாற்றத்தை என்னல் விரும்ப முடியவில்லை...' என்றேன் நான், இரண்டு தெருக்களைக் கடந்து மூன்ருவது தெருவில் நுழைந் தோம். அந்தத் தெருவின் திருப்பத்தில் ஒரு வீடு. வாசலில் பளிச்சென்று கோலமிட்டு செம்மண் பூசியிருந்தது. அந்த வீடு எனக்குத் தெரிந்தவர்களுடையது தான். - இந்த வீட்டில் ஏதோ விசேஷம் போலிருக்கிறது. செம் மண் பூசியிருக்கிறது' என்ருள் ருக்கு: - - '" இன்று கிருத்திகை இல்லையா? அதனுல்தான். வருகிறீர் களா? உள்ளே போய் பார்த்துவிட்டு வரலாம்...? என்று அவர்களைப் பார்த்து வினவினேன். உனக்குத் தெரிந்தவர்களின் வீடா? இருவருமே கேட்டார்கள். " ஆமாம், வாருங்கள்.’’ என்று அவர்களை அழைத்துக் கொண்டு அந்த வீட்டின் வாசற்படியில் ஏறினேன். முத்துமுத்தாக இட்டிருந்த மாக்கோலங்களுக்கு அடுத்த, படியாக வாசற்படியின்மேல் வரிசையாகக் கோர்த்துக் கட்டி,