பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 எது வெற்றி ? யிருந்த மாவிலைத் தோரணம் எங்களை வரவேற்றது. அது அன்று கட்டியது அல்ல. மாவிலைகள் காய்ந்து போய்த்தான் இருந்தன. இருந்தும் அதில் ஒரு புனிதம், கவர்ச்சி. ' வரவேண்டும், வரவேண்டும்...' என்ற இனிய குரலும் இசைக்குத் தப்பாத தாளம் போன்ற னிங் ரிைங் ! என்ற மெட்டியோசையும் எங்களைக் கட்டியம் கூறி வரவேற்றன. ' செளக்கியமா சீதா ? இவர்கள் இருவரும் என் பால்யத் தோழிகள். இவர்களுடன் இந்தப் பக்கமாக வரவேண்டி யிருந்தது. அப்படியே உன்னையும் பார்த்து விட்டுப் போகலா மென்று வந்தேன்...' என்றேன். அதனலென்ன ? நீங்கள் வந்ததுதான் பெரிது. எல்லோரும் உள்ளே வாருங்கள்...” என்று முகமலர்ர்து அழைத்தாள் சீதா. நாங்கள் மூவரும் அவளைப் பின் தொடர்ந்தோம். சாம்பராணியின் புகை வீடு பூராவும் வியாபித்திருந்தது. அதை மிகைப்படுத்துகிற விதத்தில் ஊதுபத்தியின் இனிய சுகந்தம் வேறு. மல்லிகை-ரோஜாக்களின் தெய்வீகமணம். இவைகளுக்கெல்லாம் மேலாக, பூஜை அறையினின்றும். ஏறுமயில் ஏறி விளையாடுமுகம் ஒன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுகமொன்றே...” என்ற இசைவேறு, பண்ணுடன் ஒலித்தது. நிச்சயமாக அது ஒர் ஆணின் கட்டைக் குரல்தான். 'இன்று அலுவலகம் விடுமுறையா சீதா? ' என்று வினவினேன். " இல்லை. இவராக வேண்டுமென்றுதான் விடுமுறை வாங்கிக் கொண்டிருக்கிரு.ர்....கொஞ்சம் உட்கார்ந்து கொள்கிறீர்களா இதோ வந்து விட்டேன்...' என்ருள் சீதா. நாங்கள் மூவரும் அவள் தரையில் விரித்திருந்த பாயில் அமர்ந்தோம். ஐந்தே நிமிஷத்தில் திரும்பி வந்தாள் சீதா. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டம்ளர் பசும்பால், இதமான சூட்டுடன். சிறியசிறிய தட்டுகளில் ரஸ்தாளிப் பழங்கள் நான்கு நான்கு. எங்கள் எதிரில் பணிவுடன் வைத்துவிட்டுத் தானும் பாயில் அமர்ந்து கொண்டாள். ரங்கத்தையும் ருக்குவையும் பார்த்து,