பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. ஜயலக்ஷ்மி 347 எங்கள் வீட்டில் யாரும் காபியே சாப்பிடுவதில்லை. வீட்டில் இரண்டு பசுக்கள் பால் கொடுக்கிறது. ஜயம் எல்லாம் சொல்வி யிருப்பாரே...' என்று கூறி முறுவலித்தாள் சீதா. ' காபி சாப்பிடாதது நல்ல பழக்கம் தான்...' என்ருள் ரங்கம், இந்த ரஸ்தாளிப் பழங்கள் கூட வீட்டிலேயே காய்த்துப் பழுத்தது தான்...அப்படித்தானே சீதா ? என்றேன். ஆமாம். உங்களுக்குக் கொடுத்தனுப்ப வேண்டும் என்ற ஆசை. வரமுடியவிலலே. நான் மனப்பூர்வமாக விரும்பினேனல் லவா ? தாங்களே வந்துவிட்டீர்கள்...' என்ருள் சீதா. சர்க்கரை போடாமலே இனித்த பசும்பாலையும் ரஸ்தாளிப் பழங்களையும் காலி செய்துவிட்டு நாங்கள் எழுந்திருந்தோம். ஒரு ஐந்து நிமிஷம் பொறுத்துக் கொள்ளுகிறீர்களா ? கத்தரிக்காய் பிஞ்சாக நன்ருக இருக்கிறது. உங்கள் வீட்டுக் காரருக்குப் பிடிக்குமே" என்ற சீதா என் பதிலுக்காகக் கூடக் காத்திருக்காமல் சின்னக் கூடை ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் ஒடினள். ரங்கத்தையும் ருக்குவையும் அழைத்துக் கொண்டு நானும் தோட்டத்துப்பக்கம் சென்றேன். தோட்டத்தைப் பார்த்துவிட்டு ரங்கமும்-ருக்குவும் அப் படியே அசந்து போய்விட்டார்கள்.

  • இதில் காய்க்கும் காய்கறிகளையெல்லாம் வீட்டுக்கு மட்டுமே உபயோகித்துக் கொள்ள முடியாது போலிருக் கிறதே...' என்ருள் ரங்கம் வியப்புத் தாங்காமல், -

' குறைந்த பட்சம் தினமும் ஐந்து ரூபாய்க்காவது நாங்கள் சாய்கறிகளை விற்காமல் இருந்ததில்லை. கருவேப்பிலே-அகத்திக் கீரை இப்படி...ஏதாவது ஒன்று இல்லாவிட்டால் இன்னென்று... விற்க முடிகிறது...' என்று சொன்னுள் சீதா. புஷ்பங்கள் கூட நிறைய விற்கலாம் போலிருக்கிறதே ! என்ருள் ருக்கு. - ' விற்கலாம்தான். ஆனல் நாங்கள் விற்பதில்லை. கோவில் களுக்கும்-வீட்டுக்கு வந்துசெல்கிற-அல்லது அக்கம் பக்கத் திலுள்ள சுமங்கலிகளுக்கும் நிறையக் கொடுத்து வருகிருேம். மஞ்சள் கூட ieடில் பயிராகிறது. என்ருள் சீதா,