பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 எது வெற்றி ? ' இதற்குக் கடுமையாக உழைக்க வேண்டுமே...' என்ருள் ரங்கம், ஆம், உழைக்கவே செய்கிருேம்...' இதைச் சொல்லும் போது சீதாவின் முகத்தில் ஒர் அசாதாரணமான ஒளி பரவி நின்றது. இதற்குள்' சீதா பேசிக்கொண்டே ஒரு வீசைக்கும் மேல் கத்தரிக்காயும் வெண்டைக்காயும் பறித்துக் கூடையை நிரப்பி விட்டாள். தட்டு நிறைய வெற்றிலை-பாக்கு-மஞ்சள்-புஷ்பம்-தேங்காய் எல்லாம் வைத்து எங்களுக்குக்கொடுத்தாள். மூவரும் அவளிட மிருந்து மனமில்லாமலே விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தோம். வாசல் தாழ்வாரத்தில் நாற்காலியில் உட்கார்ந் திருந்தார், சீதாவின் கணவர். பட்டை பட்டையாக உடம் பெல்லாம் திருநீறு. கையில் ராமகிருஷ்ணரின் பொன் மொழி கள் என்ற புத்தகம். நல்ல கருப்புத்தான். இருந்தாலும் முகத் தில் ஓர் உயர்ந்த ஒழுக்கத்தால் ஏற்பட்டிருந்த புனிதமானதும் கம்பீரமானதுமான பொலிவு மேலோங்கி நின்றது: என்னைப் பார்த்துவிட்டு வெள்ளைப் பற்கள் பளிச்சிட, வணக்கம் ' என்று கரம் குவித்தார். நானும் பதில் வணக்கம் தெரிவித்தேன். மூவரும் தெருவில் இறங்கி வேகமாக நடந்தோம். இந்த வீட்டைப்பற்றி உன் அபிப்பிராயம் என்ன ரங்கம் ?' என்று கேட்டேன். அழகான குடும்பம். உயர்ந்த பண்பாடு ’’ என்ருள் ரங்கம். என்ன இருந்தாலும் பிராமணக் குடும்பம்" பிராமணக் குடும்பம் தான் !" என்ருள் ருக்கு. 'நான் இதை ஒப்புக்கொள்ள முடியாது ருக்கு நம் அண்ணல் காந்திக்கு மிகமிக விருப்பமான பாடல் இருக்கிறதே ' வைஷ்ணவ ஜனதோ... அது என்ன சொல்லுகிறது ? உண்மை யான வைஷ்ணவனின் குணங்களை எவ்வளவு அழகாக அது சொல்கிறது. அதன்படி பார்த்தால் ஒருவன் பிறப்பினல் மட்டும் உயர்வாக இருக்கமுடியாது. ஒழுக்கத்தால் தான் உயருகிருன் என்று தெரிகிறதல்லவா? நம் கோமளவல்லி பிராமண வகுப்பின |ளாக இருந்தாலும் ஒழுக்கக்குறைவுகளால் அதற்கு உரிய பெரு மையை அடையமுடியவில்லை. இந்த சீதாவோ...'