பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. ஜயலக்ஷ்மி 349 சீதா பிராமணப்பெண் இல்லையா ஜயம்? ஆச்சர்யம் தாங்காமல் வினவினுள் ருக்கு. "சீதா பிராமணப்பெண்தான். ஆனல் அவளுடைய கணவர் தான்...ஒரு ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர். ' என்ன ! உண்மையாகவா ? ' இருவருக்குமே ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை, "ஆமாம் சீதாவின் கணவர் ஓர் ஹரிஜன். சீதாவின் தகப்பனரே கலப்பு மணத்தை ஆதரிக்கும் நோக்கத்துடன் இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். கலப்பு மணங்க ளால் எந்த நல்ல அம்சங்களையெல்லாம் சாதிக்க வேண்டும் என்று அவர் விரும்பினரோ அதையெல்லாம் சீதா தன் ஒப்பற்ற பெண்மையின் சக்தியால் சாதித்துக் காட்டிவிட்டாள். கோமள வல்லியைப்போல் அவளும் ஒரு நான் பிராமினுக மாறிவிட வில்லை. அதற்குப் பதிலாகத் தன் கணவரையே ஒர் ஒழுக்கத் தால் உயர்ந்த பிராமணனுக மாற்றிவிட்டாள். தன் வகுப்பில் உள்ள நல்ல அம்சங்களையெல்லாம் தன் புகுந்த வீட்டில் புகுத்தி அதை ஒரு பிராமணக் குடும்பமாக ஆக்கியதுடன் அவள் விட்டு விடவில்லை. அந்தக் குடும்பத்திலுள்ள உழைக்கும் சக்தியையும்பொறுமையையும் தானும் ஏற்றுக்கொண்டு குடும்பத்தையே உழைப்பால்-உழைப்பின் பெருமையால் உயர்த்திவிட்டாள். உள்ளபடி பெண்மையின் வெற்றியை நான் சிதாவிடத்தில் தான் ரங்கம் காண்கிறேன். கோமளவல்லியிடம் காணவில்லை. ’’ உணர்ச்சி பொங்கப் பேசிக்கொண்டே போனேன் நான். " அப்படியாளுல் முன்பெல்லாம் பேய்க்கு வாழ்க்கைப் பட் டால் புளியமரத்தில் ஏறத்தானே வேண்டும் என்பார்களே...' என்று இழுத்தாள் ருக்கு. அது அப்போதைக்குச் சரியாக இருக்கலாம். இப்போதைய புதுமைப் பெண்ணின் கடமை-லட்சணம் என்னவென்ருல்... பேய்க்கு வாழ்க்கைப்பட நேர்ந்துவிட்டால் அந்தப் பேயுடன் சேர்ந்து தானும் புளியமரம் வாசம் செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக அந்தப்பேயைக் கீழே இறக்கி அதையும் ஒர் மனிதத் தன்மையை அடையும்படி செய்துவிட வேண்டும். பெண்மைக்கு, அதற்கான சக்தி உண்டு என்பதுதான், ' என்று கூறி முடித்தேன் நான். - . . . ' கலப்பு மணங்களால் சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வு களெல்லாம் மறையும் என்றுதான் காந்தியடிகள் விரும்பினர். அந்த ஏற்றத் தாழ்வுகள் வெறும் பணம்-காசுகளோ அல்ல்து சாதிப்பிரிவுகளோ மட்டும் அல்ல. மனிதனின் திறமைகளும்.