பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{ மகுதூம் 53 33 பாங்கொலி 'டம, டம' என்ற பள்ளிவாசல் நகராவின் டங்காரம் காற்றிலே மிதந்து சென்றது. வானமுகட்டை அண்ணுந்து நோக் கும் மணராக்களின் உச்சிக் குடைவுகளினின்றும் புருக்கள் கிளம்பிச் சிறகடித்துப் பறந்தன. சிறிது நேரத்தில் மஃரிப்' தொழுகைக்கு அழைக்கும் மோதிைரின் பாங்கொலி கேட்டது. ' அல்லாஹ அக்பர்,...... .. லாஇலாஹ இல்லல்லாஹ் : மோதினர் முஸ்தபாவின் வெண்கலக் குரலில் கணிரெனக் கேட்டது பாங்கு நாதம். வடிவம்மாளுக்குக் கைநிறைய வேலை. பொழுது சாய்வதைக் கூட உணராமல், மும்முரமாக அவள் வேலையில் ஊன்றியிருந் தாள். பாங்கின் நாதம் கேட்டதும், அப்படியே இருந்த இடத் தில் சாமான்களைப் போட்டு, எழுந்துநின்ருள். கடிகாரத்தின் இரு முட்களைப் போல, அவள் வாழ்வில், பாங்கொலிக்கும், அவள் பச்சிளங் குழந்தைக்கும் தொடர்பு உண்டு. தன்னுடைகளை மாற் றிக் கொண்டு, தொட்டிலில் கிடக்கும் தன் உயிர்ப்பிஞ்சை துரக்கி முத்தமீந்தாள். வீட்டைவிட்டு வெளியேற எண்ணியதும், அவள் மனசு 'திக் கென்று ஒரு முறை அடித்தது. ஆனல் கைக் குழந்தைக்கோ காய்ச்சல் தகித்துக் கொண்டிருந்தது. நேற்று முன் தினம் நிகழ்ந்த சம்பவம் அவள் மனத்திலே சுழித்து நின்றது ஒரு விடிை. சிறிது நேரம் சிந்தித்து நின்ற அவள் ஏதோ தெம்பு கொண்டவள் போல் வீட்டை விட்டு வெளியேறினுள் வடிவம் மாள் செல்வத்தைக் கண்டதும், அடுத்தவீட்டு, எதிர்வீட்டு மாதர்களும் அவள் நிழலையொட்டிப் பின்பற்றினர். வடிவம் மாளுக்கும், மற்ற பெண்களுக்கும் நெஞ்சிலே ஒரு சலனம். அதற்கு வித்தாயிருந்தது. ஊரிலே சுழன்ற சலசலப்பு.