பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 பாங்கொலி தொழுகை முடிந்ததும். ' பாத்திஹா ஒதுவது, வடிவம் மாள் காதுகளில் ரீங்காரித்து. இன்னும் சில நிமிடங்களில் மோதி ஞர் வருவாரென எதிர்பார்த்து நின்றனர் அந்தப் பெண்கள். ஊரில் புரையோடிய பிளவால் அவர் மனசு மாறிடுமோ என மற்றப் பெண்கள் எண்ணினும், அந்த எண்ணத்தின் கீற்றுக்கூட வடிவம்மாள் சிந்தனையில் எழவில்லை. அவரின் பொன்னை குணத்தைப் பற்றியும், கனிவான மொழியைப் பற்றியும் அவளுக்கு ரொம்ப காலமாகத் தெரியும். அதாவது அவள் தாயானது முதல், இதுவரை-மூன்முவது குழந்தையை ஏந்தி நிற்கும் வரை. அலன் மோதினரை அப்பா என்று தான் அழைப்பாள். அவரும் தன் மகளைப்போல வாஞ்சையோடு அம்மா, வடிவு என்றே சொல்லுவார். தனது ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்படின், முதன் முதலில் தன் அப்பாவிடம்-மோதினரிடமே, ஓதி ஊதக் குழந் தையை எடுத்து வருவாள் ; அல்லது அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். மோதினரின் வருகை அவள் தினைவுத் தொடரை நிறுத்திவிட்டது. வடிவம்மாள் அருகில் வந்து, அக்குழந்தையின் புன்னகையை வர வழைத்து அதற்கு ஒதிப் பார்த்தார். அதைப்போல் மற்றவர்கள் குழந்தைகளையும் ஒதிப் பார்த்தார். வடிவம்மாள் குழந்தைக்குக் கொஞ்சம் அதிக மாகவே ஒதியதாக மற்றப் பெண்கள் உள்ளுர எண்ணினர்கள். நல்லூரிலே நேற்று முன்தினம் வரை எல்லோரும் நல்லவர் களாகவே இருந்தார்கள் ; நல்லவர்களாகவே வெளிப் பார் வைக்குப் பட்டார்கள். மனிதர் உள்ளக் காட்டில் மேயும் எண்ணங்களை அறியும் பூதக் கண்ணுடி ஒன்று கண்டு பிடிக்கப் பட்டால், ஒரு வேளை உலகில் பூசலுக்கே இடமில்லாது போக லாம். நேற்றுவரை, இன்றுவரை, ஏன் நாளையுங்கூட, அண்ணன் தம்பிகளாக, மாமன், மருமகன்களாக முறை கொண்டாடிப் பழகியவர்கள், பழகப்போகிறவர்கள் மத்தியில் பகை புகைந்து. காட்டுத் தீயாக வளர்ந்தது என்றல், மனித வாக்கும் போக்கும் வேறுபட்டு இருப்பதே காரணம். - . நல்லூரை இரண்டாகப் பிரித்துச் சென்ற்து, பொருனே யினின்றும் கிளைவிட்ட ஒரு கால்வாய். அதன் ஒரு கரையில் நிற்கும் கோயிலும், மறு கரையில் நிற்கும் பள்ளிவாசலும் காலத்தையே அளக்க உதவும் சின்னங்களாக இருக்கின்றன. முறையே இரு கரைகளிலும் இந்துக்களும் முஸ்லிம்களும் வாழ் கின்றனர். இரண்டு கரைகளையும் இணக்கும் பாலம் ஒன்றினைப் போலவே, இரு சாராரும் நேசமுடன் இருந்தார்கள். எப்போதே அவர்கள் மூதாதையரோடு புதையுண்டுபோன ஒரு பிரச்சனை. மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டது. அப்பொழுது மோதினருக்கு