பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகுதும் 353 நீரை காணுதவயசு, இன்று அவருக்கு அறுபது வயசு கண்டு விட்டது. ஆனல் அச்சம்பவம், நேற்று நடந்தைப் போலப் பட்டது. இந்துக்கள் கோயிலில் பெரும் விழாக் கொண்டாடினர்கள். அன்று வெள்ளிக் கிழமை, கால்வாயைக் கடந்து செல்லுகையில், கோயில் ஊர்வலம் பள்ளிவாசல் அருகில் வரலாம் என்று யாரும் எதிர் நோக்கவில்லை. ஜும் ஆ தொழுகை துவங்கும் வேளை. எனவே சிறிது தூரத்திற்குக் கொட்டடிப்பதை நிறுத்திக் கொண்டு செல்ல வேண்டினர் முஸ்லிம்கள். இந்துக்களுக்கு அந்தக் கோரிக்கை புதிராகப் பட்டது; காரணம் அவர்கள் தெரிந்தவரை, இது போன்ற ஒரு பிரச்சினை எழுந்ததாக இல்லை. முஸ்லிம்களுக்கும் இந்த மாதிரி இக்கட்டான சந்தர்ப்பம் இது வரை ஏற்பட்டதாக நினைவில்லை. எனவே இந்த அண்ணன், தம்பிமார்கள் ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுக்கத் தயங்கி ஞர்கள், வார்த்தைகள் தடித்தன; வாய்ச் சண்டை, கைச் சண்டையாகி, பின்னர் கலவரமாக வளர்ந்தது, ரத்தம் சிந்தி விட்டனர் இரு சாராரும். இருவகையினரும் நீதியைத்தேடி, கோர்ட்டுக்குச் சென்றனர். இரு கட்சிகளுக்கும் கில்லாடி வக்கீல்கள் தான். இந்த சிக்கலான பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைத்தார் வெள்ளைக்கார ஜட்ஜ். பள்ளிவாசலுக்கு மேற்புறம் நூறு கஜ தூரத்தில் ஒரு எல்லைக் கல் நாட்டப்பட்டது. அதற்கு மேற்புறமாசி எந்நேரத்திலும், கொட்டடித்துச் செல்லலாம். இந்த முடிவை இரு கட்சியினரும் ஏற்றுக்கொண்டனர். மேளச் சத்தம் நூறு கஜ தூரத்திற்கு அப்பால் தானே கேட்கும் ! எனவே அதிகத் தொல்லை இராது எனக் கருதியே நீதிபதி அவ்விதம் தீர்ப்புச் செய்தார் அன்றிலிருந்து அந்த எல்லைக்கல்லுக்கு முக்கியத்துவம் ஏற் பட்டது. இந்து முஸ்லீம்களுக்குள் நேசத்தையும் அன்புறவை யும் வளர்த்தது. புகைந்த பூசலையும், பகைமையையும் வேர றுத்த பெருமை அந்த எல்லைக்கல்லுக்குத் தான் ! இப்படியே காலம் ஓடியது. அன்று முதல் இன்றுவரை முஸ்தபாவே மோதின. ராகப் பணியாற்றி வருகிரு.ர். இப்பொழுது மோதினருக்கு நரையும் திரையும் கண்டா லும், அறுபதாவது வயதைத் தாண்டினலும் பள்ளிவாசல் காரி யங்களை சிரமப்பட்டாவது, தம் மகன் காஸிமின் உதவி கொண்டாவது, மிகத் தெம்புடனே ஆற்றி வந்தார். உள்ளத் தில் வலிமை குன்ருதவர். யாருக்கும் எதற்கும் அஞ்சாதவர். பட்டவர்த்தனமாக மனதில் பட்டதைக் கூறுவார். பள்ளிவாசல் சம்பந்தமான எந்தப் பிரச்சனையையும் ஜமா அத்" தாரிடம் கா - 23