பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 பாங்கொலி துணிந்து பேசுவார். இதற்கெல்லாம் அவருக்கிருந்த ஈமானே : காரணம் ! ஊரிலே மிகவும் செல்வாக்கும், செருக்கும் படைத்தவர் அப்துல்காதர். பஞ்சாயத்துபோர்டு உதவித்தலைவர் ஊர் பிரமுகர்களில் முக்கியமான புள்ளி. அவர் உதட்டசைவுக்கு ஊரில் பலர் காத்துக்கிடப்பார்கள். அவர் நேரடியாகச் சம் பந்தப் பட்டப் பிரச்சனையை, அவரைப் பாதிக்கும் ஒரு விஷ பத்தை, அன்று ஜும்ஆ வில் மோதினர் வெளியிட்டார் எனில், அவரது துணிவைப் பாராட்டத்தான் வேண்டும். மோதினர் கிளப்பிய பிரச்சனையைக் கேட்டு ஜமா அத்தார் . முகங்களில் ஆச்சர்யம் காணப்பட்டது. என்ன துணிச்சலப்பா இந்த கிழத்துக்கு? என உள்ளுறப் பேசினர்கள். அதுவும் அப்துல் காதருக்குப் போட்டியாக ...! என கொஞ்சம் நெஞ்சு திக் கியவாறே முணுமுணுத்தனர். மோதினர் தூண்டிவிட்ட விஷயத்தைக் கேட்டதும், அப்துல்காதரே அதிர்ந்து விட்டார்: எல்லைக் கல்லுக்கு அப்பால், அப்துல் காதருக்குச் சொந்த மான வருமானம் ஈவாத வெட்டவெளித் தரிசு கிடந்தது. ஒரு செப்புக்காசும், செலவின்றி, துளி உழைப்பின்றி அதிலிருந்து மாதம் இருநூறு ரூபாய் சுளேயாகக் கிண்டப்பதென்ருல், யார் தான் வேண்டாம் என்பார்கள்? அந்த வெளியில் சினிமாக் கொட்டகை போட்டுக்கொள்ள அனுமதித்தார் அப்துல் காதர். பஞ்சாயத்துப் போர்டில் தனக்குள்ள செல்வாக்கினல், விரைவில் லைசென்ஸும் வர்ங்கிக் கொடுத்தார். மேள தாளத்தோடு, சினிமாக் கம்பெனி துவங்குகிறது ! எல்லைக் கல்லுக்கு அப்பாலே சினிமாக் கொட்டகைக்காரர்கள் பாண்டு முழங்கினர்கள். அவர்கள் போடுகிற ரிக்கார்டு சங்கீதம், மஃரிப் தொழுகை யின் போது கணிரெனக் கேட்டது. இதனையே ஒரு பிரச்சினை யாக கொண்டுவந்தார் மோதினர். ஜமாஅத்தார்’ கூடிப் பேசலாஞர்கள். 'அப்துல் காதர் மனசு வச்சா இந்தச் சங்கடமே தீர்ந்து விடும்' என மோதினர் அவரைப் பார்த்தே கூறிஞர். தம் வருமானத்தில் கை வைக்கிருர்களே என்று அவருக்கு ஆத்திரம். ஒருவனும் தனக்குப் போட்டியாக முளேக்க மாட் டான். இந்த மோதினர்-இந்தக் கிழம் தனக்குப் போட்டி யாக.....என ஓடியது அப்துல்காதர் சிந்தன. - 'எல்லைக் கல்லுக்கும். தள்ளித்தானே கொட்டகை, இருக் கிறது? அப்துல் காதர் பிரச்சினையை சமாளிக்க முயன்ருர். ஆல்ை கொட்டகைச் சத்தம், தொழுகைக்கு இடைஞ் சலாக இருக்கிறது ’ என்றது ஒரு துடியான வாலிபம்.