பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்தன் 19 பிறகு, சுந்தரம் அவளை வெளியே அழைத்துக் கொண்டு வந்தான். நான் இந்த வீட்டிலேயே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்ருள் ஜானகி. 景 옷 * சிறிது நேரம்,கழித்து, ' நான் உன்னே ஊருக்கு அழைத்துக் கொண்டு போவதாகச் சொல்லி ஏன் ஏமாற்றினேன் என்று தானே கேட்கிருய் ? அந்தச் சமயத்தில் ரயில் பிரயாணம் செய்தி ருந்தால் நீ இறந்து போயிருப்பாய். அதைத் தடுக்கத்தான் அந்த வீட்டில் உன்னைக் கொண்டு போய்ச் சேர்த்தேன், சென்னையிலி ருப்பதாக உனக்கு மனப்பிரமையை உண்டாக்கியதால் தான் நீ பிழைத்தாய். உனக்கு என் மேல் கோபமா? ’’ என்று கேட்டான் சுந்தரம். ' எனக்கு உடம்புக்கு வந்ததுமே என் மனம் மாறிவிட்டது. அந்த வீட்டில் என்னைக் கொண்டு போய் நீங்கள் எனக்கு வைத்தியம் செய்தீர்களல்லவா? அப்பொழுதே நீங்கள் என்மீது கொண்ட அன்பை உணர்ந்து கொண்டேன். என் அசட்டுத் தனத்தை நினைக்க எனக்கே வெட்கமாக இருந்தது. ஒரு நோயாளி யின் துன்பத்தையும் உங்களைப் போன்ற வைத்தியரின் அருமையை யும் அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அடடா ! இப்படிப் பல நோயாளிகளைத் தவிக்க விட்டுவிட்டு உங்களை அழைத்துக் கொண்டு வந்துவிட்டேனே! நீங்கள் இல்லாமல் அவர்கள் என்ன பாடுபடுவார்கள் ? என்று நினைத்து வருந்தினேன். மறுபடியும் உயிர் பிழைத்து வந்தால் கீழையூருக்கு உங்களுடன் திரும்பி வந்து உங்கள் கிராமசேவையில் நானும், பங்கு கொள்வதென்று தீர்மா னித்தேன்.... ' நிஜந்தான? இப்படி நினேத்தவளேயா நான் நாலு வீட்டுக்கு அப்பால் கொண்டு போய் வைத்துப் பட்டணத்தில் இருப்பதாகச் சொல்லி ஏமாற்றினேன். ! ? ஆரம்பத்தில் தான் என்னை நீங்கள் ஏமாற்றினிர்கள், சில நாட்களுக்கெல்லாம் நான் கீழையூரில் தான் இருக்கிறேன் என்ப தைத் தெரிந்து கொண்டேன்.' எப்படி?’’. வேலைக்காரி கொண்டு வந்த ஜூலம் கொஞ்சம் உப்புக் கரித் தது. கீழையூர் ஜலம் தான் உப்புக் கரிக்கும். பட்டணத்து ஜலம் உப்புக் கரிக்காது. மேலும் நீங்கள் அடிக்கடி என்னை விட்டுவிட்டு வந்ததிலிருந்தே, ஆஸ்பத்திரிக்குத்தான் வருகிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன்.