பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகுதும் 355 சினிமாக்கொட்டகைக்கு லைஸென்ஸ் இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்? அப்துல் காதரின் நிழலில் ஒதுங்கிய ஒரு நபரின் கேள்வி இது. கலைக்டருக்கு எழுதணும்' என்ருர் மோதினர் சிறிதும் தயங்காமல். சில வாலிபர்கள் வரவேற்றனர். அப்பொழுதுதான் அப்துல் காதருக்கு ஆத்திரம் பீறிட்டது. சீற்றமும், வெறியும் கலந்த குரலில் உங்களால் ஆனதைப் பாருங்கள் என உரத்துக் கூறி விட்டு வெளியேறினர். வாலிபர்கள் தங்களுக்கு ஆதரவாகப் பேனவையும் தாளை யும் நாடினர்கள். அப்துல் காதருக்கு ஆள் பலம், செல்வாக்கு பலம். அதிகாரிகள் விசாரணை ஆரம்பிக்கவே, ஜமாஅத்' இரண்டு பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் கோயிலில் உற்சவம் ஏற்பட்டது. ஐம்பது அறுபதாண்டுகளுக்குப் பின்னர் அது ஒரு பெரிய, முக்கியமான உற்சவமாம். அண்டைக் கிராமங் களிலிருந்து அநேகர் வந்தார்கள். எல்லைக் கல்லின் பெருமைக் கும், ஊர் அமைதிக்கும் சோதனை ஏற்பட்டது. கோயிலினின்றும் மிகப் பிரமாண்டமான ஊர்வலம் கிளம்பி நகர்ந்து வந்தது. வழக்கத்திற்கு மாருக, உற்சவ உற்சாகத் தீவிரத்தில் ஊர்வலத்தின் வழி தப்பியது. எல்லைக் கல்லுக்கு இப்பால் ஊர்வலம் போகையில் மஃரிப்' வேளை, பிறகு கேட்கவா வேண்டும்? சரித்திரம் ஒரு கிளிப்பிள்ளை மாதிரி ! சொன்னதையே திரும்பக் கூறும் ! மற்ருெரு இந்து முஸ்லிம் கலவரம், அந்த நல்லூர் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. அதன் விளைவாகக் குறைந்தது இருபத்தைந்து பேர், இரு சாராரி லும் ஆஸ்பத்திரியில் இடம் பெற்றனர். போலீஸ் கண்காணிப் பில் ஊர் உறங்கிற்று. காலிகளுக்கும் கேடிகளுக்கும் கொண் டாட்டம்; ஒன்றுமறியாத அப்பாவி மக்களுக்குத் திண்டாட்டம் ! ரங்கன் ரவுடிகளில் முதல் நம்பர் அவன். அட்டகாசம் இன்னும் ஒழுங்காக ஆரம்பமாகவில்லை! அவன் இன்னும் யாரிடமிருந்தும், அத்தகைய காரியத்திற்கு அட்வான்ஸ் பெறவில்லை. எனவே அவன் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந் தான. அன்றிரவு வடிவம்மாளின் குழந்தைக்கு நல்ல காய்ச்சல். அவளுக்கு ஒரே பீதியும், பயமுமாயிருந்தது. மோதினரை அழைத்து வந்து ஒதிப் பார்க்கவேண்டுமென்று எண்ணிள்ை. ஆனல் வெளியே கண்ணேப் பொட்டையாக்கும் கும்மிருட்டு, காலமோ கெட்டுக்கிடக்கிறது ! இந்த அகால வேளையில் அப்பா' வருவார்களா ? என்ற ஐயம் அவள் மனத்தில் தெளிந்தது. இருந்தாலும், தூங்கும் மூத்த குழந்தைகளுக்கும், காயலில் கிடக்கும் கைக் குழந்தைக்கும் காவலாகக் கணவனே வைத்து