பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 பாங்கொலி விட்டு, மனத்தில் ஒரு நம்பிக்கையுடனும், உறுதியுடனும் வெளி யேறினுள். அப்பா இரவில் எங்கிருப்பார் என்ற விவரம், அவளது முதல் குழந்தை பிறந்தது முதல் நன்முகத் தெரியுமே? அவள் கால்கள் நடுக்கமுடன் பள்ளிவாசலை நோக்கி நடந்தன. மோதினர் தஸ்பீஹ் மணிகளை உருட்டிக்கொண்டு ஒதிய வாறிருந்தார் அங்கே. அப்பா... . குரலைக் கேட்டெழுந்த மோதினர், மின்சார ஒளியில் வடிவம்மாளைக் கண்டதும் திகைத் தாா. யார் வடிவா?’ என வியப்புடன் வினவினர். ஆமாம்...அப்பா என்ன விசேஷம்மா?’ என்று கூறிக்கொண்டே படிகளில் இறங்கினர். குழந்தைக்கு ரொம்பக் காய்ச்சல் அடிக்குது, அப்பா ! நீங்க ஒரு தடவை வீட்டுக்கு வந்து ஒதிட்டு வந்தாப் போதும் என்ருள் வடிவம்மாள், ரங்கனைத் தானே வரச் சொல்லணும். நீயாம்மா வந்தே ஒத்தையிலே’ என்ருர் மோதினர். . அவங்களை அனுப்பிச்சா நீங்க ஒருவேளை வருவீங்களோன்னு சந்தேகம். அதனுல்தான் நானே வந்தேன்? அவள் சந்தேகத்தை அவர் புரிந்துகொண்டார். ரங்கன்தான் ரவுடியாயிற்றே ! அவன் நிழல் பட்டால்கூடப் போதுமே, தீவினைக்கு ! மோதினர் சிறிது சிந்தனை செய்தார். கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது. ஒருமுறை வடிவம்மாளின் துயர் தோய்ந்த முகத் தைப் பார்த்தார். உள்ளத்தில் தயக்கம் வற்றிவிட்டது. வடிவம் மாளைப் பின்தொடர்ந்து, அந்த நடு நசியில், அவள் மன ஏகினர். ரங்கன் மிக்வும் பக்தியாகக் கைகட்டிக் கொண்டு நின்றன். நீண்ட நேரம் கைக் குழந்தைக்கு ஒதிப் பார்த்துவிட்டு, மற்றிரு குழந்தைகளுக்கும் ஓதிப்பார்த்தார். " அல்லாஹ் அருளால் குணமாகி விடும்; நீ ஒண்ணுக்கும் கவலைப்படாதேம்மா ' மோதினரின் இச்சொற்கள் தான் வடிவம்மாளுக்கு எவ்வளவு நம்பிக்கையையூட்டின? அவர் வெளியேறவும், துணைக்கு நான் வரட்டுமா? என்ருன் ரங்கன், வயசு தள்ளிப்போன எனக்கென்னப்பா பயம் ? a4a குத் துணையாயிரு ' என்று சொல்லிவிட்டுப் போளுர் பெரியவர்.