பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகுதும் 357 மறுநாள் குழந்தைக்கு நல்ல குணம் கண்டிருந்தது. காய்ச்ச லும் விட்டிருந்தது வடிவம்மாளுக்கு ஒரு திருப்தி. அவளுக்கு நன்றி கலந்த உணர்ச்சி உள்ளத்தில் மிகைந்து நின்றது. மோதி னருக்கு எவ்விதம் கைம்மாறு செய்யமுடியும்; அவளோ ஏழை ! ஆனல் அப்பா' வுக்குத்தான் அவள் மீது எவ்வளவு பாசம் ! அவள் மனம் இவற்றை எண்ணிப் பூரித்தது. ஆண்டவனுக்கு அடுத்தாற்போல் எனவும் ஒரு கணம் எண்ணியது: அன்று காலையில் ஊர்ப் பிரமுகர் ஒருவர் அழைப்பதாக ரங்கனைத் அவன் கூட்டாளிகளில் ஒருவன் அழைத்துச் சென்ருன்; மாலை நேரத்தில் நாலைந்து பேர் ரங்கன் வீட்டில் கூடினர்கள்: வடிவம்மாள் அடுப்பங்கரையில் வேலை பார்த்துக் கொண்டிருந் தாள். ரங்கனின் கோஷ்டி வெளிக் கதவைத் தாளிட்டுக் கொண்டு, ஏதோ இரகசியமாகப் பேசலானர்கள். வடிவம்மாள் அடுப்பங்கரை வேலையினின்றும் மீண்டு, அவர்கள் பேசுவதை ஒதுங்கி நின்று உன்னிப்பாகக் கேட்டாள். அவர்கள் பேச்சில் பள்ளி வாசல், இரவு பன்னிரண்டு மணி ' என்ற சொற்கள் அதிகமாக அடிபட்டன. ஏதோ ஆபத்துக்கு வித்திடும் பேச் செனப் பட்டது, வடிவம்மாளுக்கு. அவளுக்கு உள்ளுர கலக்கம்: ரங்கனை தடுத்து நிறுத்த அவளால் முடியாது. பள்ளிவாசல் என்றபோது அப்பா வின் நினைவே எழுந்தது. என்ன செய்வ தென்றும் அவளுக்கு விளங்கவில்லை. அவர்கள் பேச்சிலிருந்து அன்றிரவு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று மட்டுமே தெளிவாகத் தெரிந்தது. ரங்கன் ஆறு மணிக்கே வீட்டைவிட்டுக் கிளம்பி விட்டான். வடிவம்மாளின் மனக் கலக்கம் அதிகரித்தது. அவள் நிம்மதி இழந்தாள். இரவு பத்தரை மணி வரை ரங்கன் வராதது அவள் எண்ணத்தை நிச்சயப்படுத்தியது. அப்பா "வின் நினைவுதான் அவள் உள்ளத் தைக் குலைத்தது. மூன்று குழந்தைகளும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தன. ஒரு விதமான துணிவு அவள் உள்ளத்தில் உருவாயிற்று. ஆண்டவன் பாதுகாப்பில் குழந்தைகளை விட்டு விடத் தீர்மானித்தாள், கதவை இழுத்துச் சாத்திவிட்டு வெளி யேறினள். நல்ல இருட்டு பேச்சு மூச்சற்ற அமைதி ! ஆள் அரவம் இல்லாத மோனம் ! கால்வாயைக் கடந்ததும், அவள் மனம் பட பட வென அடித்துக் கொண்டது; உள்ளம் அலையாடிக் கொண்டு தவித்தது. இன்னும் ஒரு பர்லாங்கு தொலைவில் பள்ளிவாசல் இருக்கிறது. வடிவம்மாள் வேகமாக விரைந்து கொண்டிருந்தாள். சினிமாக் கொட்டகைச் சத்தம் தூரத்தில் கேட்டது. இரண்டாவது ஆட்டம் முடிந்த பிறகுதான் ரங்கன் கோஷ்டி காரியத்திலிறங்கும். இதை வடிவம்மாள் ஒட்டுக் கேட் டிருந்தாள். எனவே அதற்குமுன் அப்பா”விடம் விஷயத்தை