பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமு 34 ஸ்த்யமேவ ஜயதே " தடால் என்ற சத்தம் கேட்டது. சரோஜா பதறியடித்து ஒடிப்போய்ப் பார்த்தாள். அலமாரியில் வைத்திருந்த பெரிய நெய் ஜாடி விழுந்து உடைந்து கிடந்தது. சரோஜாவின் அம்மா நெய்யை எடுக்கும்போது கை நழுவிக் கீழே விழுந்துவிட்டது. இந்த ஜாடி சரோஜாவின் அப்பா தில்லியிலிருந்து வெகு சிரமப்பட்டு வாங்கி வந்தது. சரோஜா அலமாரிக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு பார்த்தாள். அம்மா கைப்பிடித் துணியை வைத்துத் தரையைத் துடைத்துக்கொண்டிருந்தாள். அரைப்படி நெய் இருக்கும். அவ்வளவும் கீழே சிந்தியிருந்தது ! ' என்னம்மா இது. எவ்வளவு நெய் ' என்று சரோஜா குழப்பமாகக் கேட்டாள். ' சரி, சரி, நீ ஒருத்தி அனுதாபப் படுறத்துக்கு இல்லை யேன்னுதான் குறைப்பட்டேன் ' என்ருள் அம்மா வெடுக்கென ! அம்மா முகத்தில் இருப்புச் சட்டியிலே காய்கிற வெண்ணெய் போல சட சட' என்று கோபம் பொரிந்து கொண்டிருந்தது! ' என்னம்மா, இப்படிக் கோபப்படறே ? நீதானே அன் னிக்கு ஒரு கரண்டி நெய் அதிகமாக் கேட்டத்துக்கு கோபிச்சே என்னை-நெய் விற்கிற விலையிலே கூடயும் ஆச்சு, முறமும் ஆச்சுன்னு’ 'சரி சரி, எனக்குத் தெரியும், நீ போ பெரிய மனுஷி, '