பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமு 361 ', இல்லம்மா...நான்-வந்து... ' இந்தா சரோஜா, நீ பேசாமப் போறியா இல்லையா?* 'அம்மா, நான் அப்பாகிட்டச் சொல்லிடுவேன்னுதானே பயப்படுறே, அம்மா ?” சொல்லுவே சொன்னே, அவ்வளவுதான். அப்புறம் பாரு உன்னே என்ன செய்யறேன்னு. ' இல்லேம்மா, நான் சொல்லவே மாட்டேனம்மா. கோபிக் காதேம்மா, சத்தியமா நான் அப்பாகிட்டேச் சொல்லமாட்டேன் அம்மா... ' சரோஜாவின் அம்மாவுக்குக் கோபம் தணிந்தது. சத்தியத் துக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்று சரோஜாவுக்கு அப் பொழுதுதான் மிக நன்முய்ப் புரிந்தது. அந்த ஒரு வார்த்தை எவ்வளவு எளிதாக அம்மாவினுடைய கோபத்தை விரட்டி விட்டது என்று சந்தோஷப்பட்டாள் சரோஜா ! அன்று சாயந்திரம் சரோஜாவின் அப்பா ஆபீஸிலிருந்து வந்ததும், என்னவோ வாசனை பார்க்கிறது மாதிரி மூக்கை இழுத்து இழுத்து சுவாசித்துக்கொண்டே வந்தார். . 'இதென்ன... ஓ ! நெய்யா, சரி சரி-நெய் விற்கிற விலை யிலே...' என்று ஆரம்பித்தார் அப்பா. ' நான் ஒண்ணும் கொட்டலை, நம்ம வீட்டிலே வளர்கிறதே ஒரு செல்லப் பூனே, அதுதான்...' என்று அம்மா வார்த்தையை இழுத்தாள். ஒகோ ஜாடியுமே போயுட்டுதா, ரொம்ப சரி ' என்று சொல்லிக்கொண்டே உடைந்து போன துண்டுகளைப் பார்த் தார். - ஒரு தாவிலே தாவி நெய்யையும் கொட்டி, ஜாடியை யும் உடைச்சுட்டு காத்தாப் பறந்துட்டுதே' என்று அம்மா சொன்னள். ஒரே ஆச்சரியத்தில் மூழ்கிப் போனவள் போல ? சரோஜாவின் அப்பாவுக்கு ஆத்திரம் வந்தது. அந்த நிமி ஷத்தில் பூனைமட்டும் அகப்பட்டிருந்தால் அவ்வளவுதான். பொதுவாகவே அஹிம்சையில் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது ! - - அம்மா சொன்னதையெல்லாம் சரோஜா கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். ஆனாலும் நடந்த விஷயத்தை அப்பாவிடம்