பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 ஸத்யமேவ ஜயதே சொல்லவில்லை; அம்மாவுக்கு சத்தியம் அல்லவா செய்து கொடுத் திருக்கிருள் ! இந்தக் குழப்பம் எல்லாம் நடந்து அரை மணி நேரம் கழித்து அவர்கள் வீட்டிலே வளருகிற அந்தக் கறுப்புப் பூனை வந்தது. வந்தால் என்ன ? கோபத்தில் அந்தமாதிரி ஒரு காரி யம் அப்பா செய்வார் என்று சரோஜா எதிர் பார்த்தாளா ? இல்லை. . என்ன செய்தார் அவர் ? அந்தப் பூனையைப் பிடித்து ஒரு சாக்குக்குள்ளே போட்டுக் கட்டி எங்கேயோ ஊருக்கு வெளியே கொண்டுபோய் விரட்டி வந்துவிட்டார் ! சரோஜாவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதைத் தூக்கிப் போடும்போது அந்தச் சாக்குக்குளே இருந்து கேட்ட பூனையின் பரிதாபக் கூச்சல் சரோஜாவின் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. அன்று இரவு அவள் சரியாகச் சாப்பிடவில்லை. கறுப்புப் பூனையிடம் சரோஜாவுக்கு அபாரமான பிரியம் உண்டு. பாவம் அது என்ன செய்தது? ஜாடியைக் கீழே தள்ளினது அம்மா அல்லவா! அப்பாவோ என்ருல் இந்தப் பூனையைக் கொண்டு போய் எங்கோ கண் தெரியாத இடத்தில் விட்டு விட்டாரே ! சரோஜாவுக்கு அப்பாவின் பேரில் கோபம் கோபமாக வந்தது. ஆலுைம் அப்பாவையுந்தான் சொல்ல என்ன குற்றம் ? நெய் ஜாடியைக் கீழே தள்ளியது பூனைதான் என்று அவர் உண்மை யிலேயே நம்பினர். அம்மாதானே பொய் சொன்னாள்? ஆனல் பாவம், அம்மா ஏன் பொய் சொன்னுள் ? அப்பா கோபத்துக்குப் பயந்துதானே. அவள் மேலேயும் குற்றமில்லை . என் மேல்தான் குற்றம். நான் ஏன் அப்பாவிடம் நிஜத்தைச் சொல்லவில்லை ?’’ என்று சரோஜாவின் குழந்தை உள்ளம் துடித்தது. சரோஜா படுக்கையில் புரண்டுகொண்டே தன்னுடைய பசலை அறிவுக்கு எட்டியபடி யெல்லாம் யோசனை செய்தாள்: 'இப்படியே போய் அப்பாகிட்டே நிஜத்தைச் சொல்லிட்டா என்ன ஆன சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கோமே அம்மா கிட்டே, சத்தியம்...சத்தியமு மாச்சு சக்கரைப் பொங்கலுமாச்சு, பேசாமே தைரியமா அப்பாகிட்டே போயி சொல்லிடத்தான் போறேன். ஆன அப்பா பூனையைக் கொண்டு போய் வெளியே விட்டு விட்ட மாதிரி அம்மாவையும் கொண்டுபோய் வெளியே விட்டுட்டு வந்திட்டா...? ' சரோஜாவுக்கு அந்த எண்ணத்தையே தாங்க முடியவில்லை. அந்த இரவு முழுதும் அவளால் உறங்கவ்ே முடியவில்லை. எப் போது விடியும், எப்போது இந்தக் கோபக்கார அப்பாவை