பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமு 3 Ꮾ 3 யும், பொய் சொன்ன அம்மாவையும் மறந்து கொஞ்ச நேரம் பள்ளிக்கூடத்தில் போய் இருக்கலாம் என்று எண்ணிள்ை: 游 奖 மறு நாள் விடிந்ததோ இல்லையோ அவசரம் அவசரமாகக் குளித்தாள் சரோஜா. அம்மா, தலையைச் சீவிவிடம்மா, இன்னிக்குப் பள்ளிக் கூடத்துக்கு சீக்கிரம் போகனும் ' என்ருள், இதென்ன அம்மா ஒரு நாளும் இல்லாத திரு நாளா இருக்கு ? பள்ளிக்கூடத்திலே என்ன உனக்கு திடீர்னு இத்தனை அக்கறை ? ' என்று அம்மா கேட்டாள். இல்லேம்மா, இன்னிக்கு எங்க பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ் பெக்டர் வரார். கொஞ்சம் சீக்கிரமே போகணும்மா. ” இவ்வாறு சரோஜா ஒரு குட்டிப் பொய் சொல்லி விட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பினுள் போகிற வழியிலேயே ஒரு யோசனை வந்துவிட்டது : இன்ஸ்பெக்டர் வரார்னு சொன் னேனே அம்மாகிட்டே, இது மட்டும் பொய் இல்லையா. செ, செ! அம்மா ஒரு பொய் சொன்னதுேைல அதுக்காக நான் எத்தனை பொய் சொல்லவேண்டியிருக்கு ? கடவுளுக்குப் பொய்ன பிடிக்காதுன்னு வாத்யார் சொல்லி யிருக்காரே, ஒரு பொய்யை மறைக்கிறதுக்காக நான் எத்தனை பொய் சொல்லிட்டேன்...அப் படின்ன கடவுளுக்கு என்னைப் பிடிக்காதா? -சரோஜா என் னென்னவோ யோசனை பண்ணி மூளையைக் குழப்பிக் கொண் டாள். இவளுடைய அதிருஷ்டம் அன்று பள்ளிக்கூடத்தில் முதலாவது வகுப்பு தமிழ் வகுப்பு. திருக்குறள் பாடம். அதிலும் எந்த அதிகாரம்? வாய்மை. சரோஜா வகுப்பைக் கவனிக் காமல் ஏதேதோ யோசனை பண்ணிக் கொண்டிருந்தாள். தமிழ் ஐயா இதைப் பார்த்துவிட்டர். சரோஜா, எங்கே கவனிக்கிருய்,...ஹஅம்? அந்த மூன்ரு வது குறளைப் படி ' என்று அதட்டினர். சரோஜா எழுந்து படிக்க ஆரம்பித்தாள்:" தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் " திக்கிக்கொண்டே சரோஜா வாசித்தாள். தமிழ் ஐயா அவளை அதோடு விடவில்லை..." அதற்கு என்ன பதவுரை எழுதியிருக் கிறது, வாசி' என்ருர்,