பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器64 ஸத்யமேவ ஜயதே சரோஜா தொடர்ந்து படித்தாள் : தன் நெஞ்சு அறிவது-தன்னுடைய மனத்துக்கே பொய் என்று தெரிவதை பொய்யற்க-அந்தப் பொய்யைச் சொல்லாதே; பொய்த்தபின்-அப்படிப் பொய் சொன்னல், பிறகு தன் நெஞ்சே தன்னைச் சுடும்-தன்னுடைய மனமே தன்னைச் சுட்டுப் பொசுக்கும்' இந்தத் திருவள்ளுவர் தன்னைப்பற்றியே எழுதியிக்கிருரே ' என்று சரோஜாவுக்கு ஒரே வியப்பாக இருந்தது. தமிழ் ஐயா வோ, அன்று வகுப்பில் இதற்கு மேல் இன்னும் வியாக்யானம் செய்தார். ' என்ன கஷ்டம் வந்தாலும் நாம் பொய் சொல் லாமல் இருக்க வேண்டும். நன்மை வரும்போது உண்மை பேசுவது பெரிதில்லையே. கெடுதியே வரும் என்று தெரிந் தாலும் கூட உண்மையே சொல்வதுதான் சிறப்பு ' என்ருர், சரோஜாவுக்கு ஏன் பள்ளிக்கூடத்துக்கு வந்தோம் என்று ஆகிவிட்டது. எப்பொழுது வீட்டுக்கு விடுகிற மணி அடிக்கும் என்றே காத்துக் கொண்டிருந்தாள். நேற்று ஒரு நாள் அவளு டைய அம்மாவுக்குச் செய்து கொடுத்த சத்தியம் சத்தியமா, பொய்யல்லவா அது என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண் டாள்-அந்தப் பொய்ச் சத்தியத்தினுல் அவள் அடைந்த வேதனை போதும் போதும் என்ருகிவிட்டது ! அப்பா தன்னைக் கோபித்துக் கொண்டாலும். அம்மா வையே கோபித்தாலும் அதனுல் என்ன கெடுதிவந்தாலும், இனிமேல் ஒரு நிமிஷம்கூட ஜாடியை உடைத்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லாமல் இருக்கக்கூடாது என்று தீர்மானித்து விட்டாள் சரோஜா. அப்பா அம்மாவை ஏதாவது கோபித்து இம்சித்தால், தானே குறுக்கே நின்று தன்னைத் தண்டிக்கும்படி சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தாள் ! சரோஜா வீட்டிற்கு வந்தபோது அம்மா அப்பாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தது கேட்டது : ' உங்களுக்குக் கோபம் வந்தாலும் இப்படியா வரும்... ? பாவம், அந்தப் பூனையைக் கொண்டு எங்கேயோ விட்டுட்டு வந்துட்டீங்களே' என்ருள் அம்மா. - - சரிதான். நேற்று நெய் ஜாடியை உடைச்சுது: நாளைக்குப் பால்-செம்பை கவிழ்க்கும், நாளைக்கு மறுநாள்...' . . இப்படி அபாண்டமாகச் சொல்லக்கூடாது. அது என்ன செய்தது பாவம் ? " என்று கேட்டாள் அம்மா.