பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமு 365 ஏன், நெய் ஜாடியை உடைச்சது போதாதா... இன்னும் வேறே? என்று கடுகடுப்புடன் அப்பா கேட்டார்.

  • நெய் ஜாடியை உடைச்சது...பூனை இல்லை ' என்று மெது வாக வார்த்தைகளை அசைபோட்டாள் சரோஜாவின் அம்மா. சரோஜா கூர்ந்து கேட்டாள்;

' அப்ப யாரு உடைச்சது ஜாடியை ? ' நீங்கதான் மகா கோபக்காரர் ஆச்சேன்னு ஒரு சின்னப் பொய்யைச் சொன்னேன். அதுக்காக நீங்க இந்தப் பூனையைக் கொண்டு இப்படி விட்டுடுவீங்கன்னு கண்டேன...பாவம், எங்கெல்லாம் நின்று தவியாய்த் தவிக்குதோ...' என்று அம்மா ஒரு சோகக் குரலுடன் கேட்டாள். சரோஜாவுக்கு அதைக் கேட்டதும் அழுகை அழுகையாய் வந்தது. உண்மையில் அவளுடைய அம்மா சொன்ன விதத்தில் அப்பாவுக்குங்கூட இரக்கம் வந்து விட்டதுபோலத் தோன்றியது. அதைவிட அவளுக்கு வருத்தம், தான் அப்பாவிடம் முதலில் உண்மையைச் சொல்லவில்லையே என்றுதான். " அப்பா, அப்பா, நீ கோவிச்சுக்காதே, ஒண்னு சொல் லட்டுமா? ' என்று அப்பாவுக்கு அருகிலே வந்தாள் சரோஜா. ' என்னடா கண்ணு சொல்லு' என்ருர் அப்பா. " அப்பா, நீ கோவிச்சுக்குவே...' இல்லையம்மா, கோவிச்சுக்கலை நான்...' 1 சத்தியமா கோவிச்சுக்கமாட்டேன்னு சொல்லு. ’’ சத்தியமா கோவிச்சுக்கலை,’’ 'ஜாடியை அம்மாதான் கீழே போட்டு உடைச்சா ஆன உன்கிட்டே சொல்லக்கூடாதுன்னு என்னை சத்தியம் வாங்கிட்டா அப்பா...அதனுலேதான் நான் சொல்லலேயப்பா " ...வார்த்தை களே முழுதும் முடிக்குமுன் சரோஜாவுக்கு அழுகை அழுகை யாய் வந்துவிட்டது. சரோஜாவின் அப்பா சிரித்துவிட்டார். அப்பொழுது தான் சரோஜாவுக்கும் தைரியம் வந்தது. அப்பா, என் பூனைக்குட்டி ? அது இல்லாமே எனக்கு எப் படியோ இருக்கப்பா. அதைக் கூட்டிகிட்டு வாரியாப்பா' என்று சரோஜா கெஞ்சிள்ை. . அப்பொழுது தடால் என்று சத்தம் கேட்டது. என்ன ஆச்சரியம் ! சாக்குக்குள்ளே போட்டு ஊருக்கு வெளியே கொண்டு போய்த் துரத்திவிட்ட பூனைக்குட்டி, இப்பொழுது மறுபடியும்