பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 6 ஸத்யமேவ ஜயதே வீட்டை அடையாளம் பிடித்து வந்துவிட்டது; வந்ததோடு மட்டுமில்லை, ஷெல்பிலே சொருகி வைத்திருந்த எதையோ கீழே வேறு தள்ளி விட்டது-உண்மையிலேயே, சத்தியமாகவே, தள்ளி விட்டது! அப்பா அம்மா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பூனையைப் பிடித்தார்கள். ஆனல் அது இருவரிடமும் தப்பித்துக்கொண்டு சரோஜா மடியிலே தாவியது. அம்மா கீழே விழுந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். சரோஜாவின் தாத்தா கடைசிவரை விட்டுப் பிரியாமல் வைத்துப் படித்துக் கொண்டிருந்த புத்தகம் அது. அவருடைய சொத்துக்கு யார் யாரோ தாயாதிகள் வந்து வியாஜ்யம் போட்டு தாவர ஜங்கமங்களை எடுத்துக் கொண்டு போனர்கள், ஆனால் இந்தப் பழம் புத்தகத்தை மட்டும் யாருமே சீண்டுவாரில்லை, - அது என்ன புஸ்தகம்பா ? என்று சரோஜா கேட்டாள், உண்மையில் அவளுடைய அப்பாவுக்கே அது என்ன புத்தகம் என்று இதுவரை தெரியாது. ரிஜிஸ்டர் பத்திரமானல் இதற் குள் கரைத்துக் குடித்திருப்பார்-பழம் புத்தகந்தானே அது ! " அப்பா, நான் கேட்டேன், சொல்ல மாட்டேங்கிறியே, அது என்ன புஸ்தகம்பா ? ’’ என்று மறுபடியும் சரோஜா கேட்டாள். உங்க தாத்தா வச்சுட்டுப் போன சாஸனப் பட்டயம் ' என்று எகத்தாளமாகச் சொல்லிக் கொண்டே அந்தச் சுவடியைத் தூசு தட்டி முதல் முறையாகப் பிரித்தார் அப்பாடு தாத்தா விட்டுப்போயிருந்த சாஸ்னத்தைப் பிரித்ததும் அந்த உபநிஷதச் சுவடியில் எழுதியிருந்த வாசகம் இது தான் :- ஸத்யமேவ ஜயதே ! அப்பா அதற்கு வியாக்யானம் சொன்னர், பொய் சொன்னே, கறுப்புப் பூனை காணுமப் போச்சு, உண்மையை ஒத்துக்கொண்டே, உடனே போன பூனை திரும்ப வந்துட்டுது !' சரோஜா அந்தக் குடியரசு மந்திரத்தைத் தனக்குள்ளே உச்சரித்துக் கொண்டாள் :- ஸத்யமேவ ஜயதே !’’