பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"வேளு” 35 ஆண்பிரிய வாழாது வீட்டு வாசலை நெருங்கி வந்து நின்றது வண்டியின் சதங்கை யோசை அலங்கானூர் பண்ணையார் அம்பலவாணன் வண்டியி னின்று இறங்கினர். வாசலில் தண்ணிர் தெளித்துக் கொண்டி ருந்த வேலைக்காரி ராஜாமணி தலை நிமிர்ந்தாள் பண்ணையாள ரைக் கண்டதும் சோர்வுற்றிருந்த அவள் முகத்தில் தென்பு தெளிந்தது. ' வாங்க, வாங்க, உங்களுக்குக்காகத்தான் புலம்பிக்கிட்டே இருக்கு." - ஆசை நம்பிக்கையுடன் புரளும் குரலில் அவரை வரவேற்று அழைத்துக்கொண்டு உள்ளே செல்லலானள். ராஜாமணி அம்பலத்தின் மனம் எண்ணவலை இழைக்க அவர் உரையா விரை வுடன் உள்ளே சென்று குமுதம் படுத்திருக்கும் அறையை அடைந்தார். காய்ந்த சருகாய்க் கிடந்தாள் குமுதம் கட்டிலிலே. சாளர வழியூடே நுழையும் மாலே மஞ்சள் வெயில், பாதையில் காற்ருேடு கலந்து பரவித் திரியும் தூசி மண்டலத்தின் மூலம் தன் ஒளிக்கும் உருவம் ஏற்று தூசிகளின் உருவுக்கும் ஒளி யூட்டி தரையில் வழிந்து குழம்பியது. ஒளி யார் ? எது தூசி ?? அந்தக் காட்சி கிளம்பிய நினைவை அம்பலத்தால் சீரணிக்க முடியவில்லை. அருகே மருந்து புட்டிகள் அடுக்கிக் கிடந்தனகுமுதத்தின் வாழ்வு நோயிடம் பெற்று வரும் தோல்வியின் அறி