பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளு 369 அரங்கிலாடிய அந்தக் கன்னியிடம் அவையிலிருந்த அம்பலத் தின் உள்ளம் அதுபோதுதான் கொள்ளபோனது. நாட்டியம் முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது குமுதத்தின் இதயக் கூண் டில் அம்பலத்தின் மனக்கிளி சிறைபட்டுக் கிடந்தது. 外 繁 % பிறந்த அறிமுகம் வளர்ந்த உறவில் கலந்த உணர்வாகி ஒட்டிய இரு உள்ளங்களாகி விட்டன. குமுதா குலத்தால் தாசியானல் என்ன? குணத்தால் உயர்ந்து குப்பையில் பூத்த குருக்கத்தி அல்லவா ? அம்பலத்தின் அன்பிலே மூழ்கித் திளைத்து, மண்ணே விண்ணுக்கி மகிழ்ந்தது அவள் மனம்: ஆளுல் கனவும், நனவும் கொற்கையும் செயலும், ஆசையும் பேறும் கூடாத தத்துவங்களா? மதி கட்டிய மணல் வீட்டை விதி சீறிச் சிதைக்கும் விளையாட்டா வாழ்க்கை ? காலக் கடும் புயல் குமுதத்தின் கோல வாழ்வை ஒரு நாள் குலைத்து விட்டது. அவள் அம்பலவாணனின் கருத்துக் கிசைந்த காதலிதான். உள்ளத்தைக் கவர்ந்த கிள்ளைதான். அவர் குலப் பெருமையை நீத்து அன்பிற்காக உறவு பூண்ட குமுதம்தான். ஆனால், அவர் அன்று கண்ட காட்சி? கூடத்து ஊஞ்சலில் அந்நிய இளைஞன், அவர் அறியாத ஒருவனுடன் அவள் அருகிலமர்ந்து பேசியவாறே சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த எதிர்பாராத விபரீதம்! மனது மருகி விட்டது, நெஞ்சம் நீர்த்துப் போனது. வானில் பறந்திடும் காற்ருடியின் நூல், வெள்ளத்தில் நீந்தும் நீர்க்கோளத்தின் மேலுறை-இவற்றைப் போன்றதே காதல் வாழ்விலே கனிந்திடும் நம்பிக்கையென்ற மென்மையான உணர்வும். சந்தேகம் என்ற அழிவு நினைவு அங்கே முளைத்து விட்டால் அன்புக்கு மரணம் தான். ' மண்பரியை நம்பித் தண்ணிரில் இறங்குகிருய் மாணிக் கத்தை வேண்டி மண் புற்றைக் கிளறுகிருய் என்று பெற்ருேரும் பெரியோரும் அன்று கூறிய போதனைகள் இயல்பான உண்மை தான ?’’ குலப்பற்று குமுதத்தின் உறவை ஒப்பாமல் கூறிய ஊர்ப் பேச்சு அந்த விகாரமான நிலையில் மின்வெட்டுப்போல் எண்ண வெளியைக் கீறி அமிழ்ந்தது. எனவே, அவளைப் பர்ர்க்க வந்த அம்பலம் அங்கே கண்ட காட்சியிலும், அக்காட்சிக்கு சாட்சி &m—24