பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேணு 371 அம்மாவின் அபிமான புருஷனை என் தந்தை ஏகாம்பரத் திற்குத் தன் உரிய மனைவி மூலம் பிறந்த பிள்ளை மணவாளன் தான் அவன் என்னுடன் பிறவாக் குறையை நிறைவு செய்து வரும் அவனை நீங்கள் அறியாத காரணத்தால் தவருக எண்ணிக் கொண்டு...... பிறந்த குலமும் போதாத காலமும் எனக்குத் துரோகம் செய்துவிட்டது. ' " நீ உடனே சொல்லி அனுப்பி இருக்கலாமே, குமுதம் அதைச் செய்ய விரும்பாமல்தான் நான் என்னை இந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டேன். திரிந்து போன உறுதியின் விளைவாகப் பிரிந்துபோன உறவைச் சேர்க்க முயலுவது பைத்தியக்காரத்தனமல்லவா ? சாதியால் மலைமடு நிலையில் இருந்த நாம் நீதியால் ஒன்றுபட்டோம் என நினைந்து மகிழ்ந்து வந்தேன். கொள்கையில் வாழ விரும்பி இயல்பை ஏற்க மறுத் தேன். இறுதியில்...... ' ஐயோ, குமுதா ! இது என்ன சோதனை? ' ஆத்ம சோதனை, அத்தான். உங்களைப் போன்றவர்களே என் போன்றவர்கள் இனம் கண்டுகொள்ள வாழ்வு எனக்கு ஏற்படுத்தித் தந்த ஆராய்ச்சி’ இல்லை, இது நீ என் அறியாமைக்கு இட்ட தண்டனே, குமுதம். ' 'தண்டனையா? ஆராயாமல் ஐயம் கொண்டது, ஆத்திரத் தில் அறிவை மறந்தது, காரியத்தை கருத்து மிஞ்சிவிட்டது. கண்மூடித்தனமாக நம்பியிருந்தவளே உதறிவிட்டுப் புதியவள் ஒருத்தியைப் புணர்ந்து கொண்டது யார் யாருக்களித்த தண்டனை ? ’’ அம்பலம் தாங்கமுயாமல் தத்தளித்துப் போனர். குமுதம் பொங்கப் பொங்கப் புலம்பினள். நீர் கக்கி நின்ற அவள் நயனங்கள் சற்று அயர்ந்து மூடி இளேப்பாறின. மூச்சு மேல் கீழாக ஊசலாடியது. பிறகு, சிறிது நேர்த்திற்குள்ளாகவே தன் களைப்பை அடக்கிக்கொண்டு உணர்ச்சிகள் துடிக்கப் பேச லானள். ' உருகி, உலர்ந்து, உடைந்து போகப் போகும் இந்த அந்திமப்போதில் உங்கள் ஒருவருக்கு மட்டுமே என் நெஞ்சறிய உரிமையாக இருந்தேன் என்ற நினைவுடன் போகிறேன். இதை நீங்களும் புரிந்து கொள்ளவேண்டுமென்றுதான் உங்களை என் னுயிர் பிரிந்து விடுமுன் பார்க்கவேண்டுமென்று......"